தமிழகத்தைச் சேர்ந்த திரு.பாபி பாலச்சந்திரன் அவர்கள் அமெரிக்காவில் தனது உயர்கல்வியை முடித்து, எக்ஸ்டெர்ரோ எனும் தரவு பாதுகாப்பு நிறுவனத்தை நிறுவி அதன் தலைமைச் செயலாளராக செயல்பட்டு வருகிறார். தற்போது அவர் தமிழ் திரையுலகில் கால் பதித்துள்ளார். பாபி டச் கோல்ட் யுனிவர்சல் பிரைவேட் லிமிடெட் என்ற தயாரிப்பு நிறுவனத்தை துவங்கி, அதன் மூலம் தமிழ்த் திரைப்படங்களை தயாரித்து வருகிறார். முதலாவதாக ‘டிமான்டி காலனி-2’ என்ற திரைப்படத்தை தயாரித்துள்ளார்.
இரண்டாவது தயாரிப்பாக வைபவ் மற்றும் அதுல்யாவின் நடிப்பில் சென்னை சிட்டி கேங்ஸ்டர் என்ற திரைப்படத்தை தயாரித்து வருகிறார்.இத்திரைப்படத்தின் முதல் தோற்றம் ஏற்கனவே வெளியாகிவிட்டது. இத்திரைப்படத்தின் இரண்டாவது தோற்றமான ‘மோஷன் போஸ்டர்’ இன்று மாலை 6 மணி அளவில், தயாரிப்பு நிறுவனத்தின் அதிகாரப்பூர்வ சமூக வலைதளப் பக்கங்களில் வெளியாகியது.
இத்திரைப்படத்தில் வைபவ், அதுல்யா ரவி, ஆனந்தராஜ், ஜான்விஜய், ரெடின் கிங்ஸ்லி, பி.எல்.தேனப்பன் மற்றும் பல முன்னணி நடிகர்கள் திரைப்படத்தில் பணியாற்றுகின்றனர்.இப்படத்திற்கு டி. இமான் அவர்கள் இசையமைக்க, டிஜோ டோமி அவர்கள் ஒளிப்பதிவாளராக பணியாற்றுகின்றார். சுரேஷ் ஏ பிரசாத் படத்தொகுப்பையும் அருண் சங்கர் துரை கலை இயக்கத்தையும் கவனிக்கின்றனர். கார்த்திக் நேத்தா மற்றும் கருணாகரன் வரிகளில் பாடல்கள் உருவாகின்றன. படத்தைப் பற்றிய மேலதிக தகவல்கள் கூடிய விரைவில் ஒவ்வொன்றாக தயாரிப்பு நிறுவனம் சார்பில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.
படம் விரைவில் வெளியாக உள்ளது.