V4UMEDIA
HomeNewsKollywoodதலைவர்-171 பற்றி அப்டேட் கொடுத்த லோகேஷ் கனகராஜ்!

தலைவர்-171 பற்றி அப்டேட் கொடுத்த லோகேஷ் கனகராஜ்!

உலக நாயகன் கமலின் மகளும், நடிகையும், இசையமைப்பாளருமான ஸ்ருதிஹாசன் அவர்களின் நடிப்பு மற்றும் இசையமைப்பில், உலகநாயகனின் வரிகளில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அறிமுகமாகும் ‘இனிமேல்’ என்ற ஆல்பம் பாடல் ராஜ்கமல் ஃபிலிம்ஸ் இன்டர்நேஷனல் youtube-பக்கத்தில் கடந்த 25-ஆம் தேதி வெளியானது.

இது தொடர்பான பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய இயக்குனர் லோகேஷ் கனகராஜ் அவர்கள் பத்திரிகையாளர்களின் கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

அப்போது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில்,அனிருத் இசையில், ‘சூப்பர் ஸ்டார்’ ரஜினிகாந்த் அவர்கள் நடிக்கும் தலைவர்-171 படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் துவங்க உள்ளதாகவும் அந்த படத்தை முடித்துக் கொடுத்தவுடன் உடனடியாக கைதி-2
படத்தின் படப்பிடிப்பு துவங்கும் என்றும் கூறினார்.

Most Popular

Recent Comments