பா.ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம் நடித்து வரும் படம் தங்கலான். பீரியட் படமாக உருவாகி வரும் இந்த படத்தின் கதை கேஜிஎப் பாணியில் கோலார் தங்க வயல் பின்னணியில் நடைபெறும் விதமாக உருவாக்கப்பட்டுள்ளதாக சொல்லப்படுகிறது. கதாநாயகிகளாக பார்வதி, மாளவிகா மோகனன் ஆகியோர் நடிக்க முக்கிய வேடத்தில் நடிகர் பசுபதி நடித்து வருகிறார்.
ஜிவி பிரகாஷ் குமார் இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இப்படத்தில் நடிகர் விக்ரம் வித்தியாசமான தோற்றத்தில் நடித்திருக்கிறார். மேலும் இப்படத்தின் படப்பிடிப்பு பணிகள் 118 நாட்கள் நடைபெற்று முழுவதுமாக நிறைவடைந்திருக்கிறது. இந்த நிலையில் இந்த படம் பொங்கலுக்கு வெளியாகும் என சொல்லப்பட்டு வந்தது. ஆனால் தற்போது படக்குழுவினர் இந்த படம் 2024 ஜனவரி 26 குடியரசு தினத்தில் வெளியாகும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளனர்.