HomeNewsKollywoodதம்பி ராமையா மகன் - அர்ஜுன் மகள் நிச்சயதார்த்தம் நடைபெற்றது

தம்பி ராமையா மகன் – அர்ஜுன் மகள் நிச்சயதார்த்தம் நடைபெற்றது

சமீப காலமாக திரையுலக இளம் நட்சத்திரங்கள் திருமண வாழ்க்கையில் இணைவது தொடர்ந்து நடைபெற்று வருகிறது. கடந்த வருடம் கௌதம் கார்த்திக் – மஞ்சிமா மோகன், விக்னேஷ் சிவன் – நயன்தாரா, சமீபத்தில் அசோக் செல்வன் – கீர்த்தி பாண்டியன் என பெரும்பாலும் திரையுலகில் இருக்கும் நட்சத்திர ஜோடிகள் திருமண பந்தத்தில் இணைந்தனர்.

அந்த வகையில் லேட்டஸ்டாக இயக்குனரும் குணச்சித்திர நடிகருமான தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையா மற்றும் நடிகர் ஆக்சன் கிங் அர்ஜுனின் மகளான ஐஸ்வர்யா இருவருக்கும் திருமணம் உறுதி செய்யப்பட்டு தற்போது நிச்சயதார்த்தம் நடைபெற்றுள்ளது.

இவர்கள் இருவரும் கடந்த இரண்டு வருடமாகவே காதலித்து வந்தார்கள் என்றும் பெரியவர்கள் சம்மதத்துடன் இந்த திருமணம் நடைபெற இருக்கிறது என்றும் தெரியவந்துள்ளது. திருமண தேதி குறித்த தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கலாம்.

அர்ஜுன் மகள் ஐஸ்வர்யா பட்டத்து யானை, சொல்லிவிடவா ஆகிய படங்களில் கதாநாயகியாக நடித்தார். உமாபதி அதாகப்பட்டது மகாஜனங்களே, மணியார் குடும்பம், திருமணம் உள்ளிட்ட படங்களில் கதாநாயகனாக நடித்தார். தற்போது தம்பி ராமையா, சமுத்திரக்கனி நடித்து வரும் ராஜா கிளி என்கிற படத்தை இயக்கி வருகிறார்.

- Advertisment -
V4UMEDIA

Most Popular

Recent Comments