துணிவு படத்தை தொடர்ந்து அஜித் நடிக்கும் புதிய படத்தை இயக்குனர் மகிழ் திருமேனி இயக்குகிறார் என்பது ஏற்கனவே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டு விட்டது. இந்த படத்தில் கதாநாயகியாக திரிஷா நடிக்கிறார் என்பதும் உறுதிப்படுத்தப்பட்டு தற்போது இந்த படத்தின் படப்பிடிப்பு அஜர் பைஜான் நாட்டில் நடைபெற்று வருகிறது.


இந்த படத்தில் இரண்டு கதாநாயகிகள் என்றும் அதில் இன்னொரு கதாநாயகியாக ஏற்கனவே வலிமை படத்தில் அஜித்துடன் இணைந்து நடித்த பாலிவுட் நடிகை ஹூமா குரேஷி நடிக்கிறார் என்றும் சொல்லப்பட்டு வந்தது. இந்த நிலையில் தற்போது அவருக்கு பதிலாக அந்த கதாபாத்திரத்தில் நடிகை ரெஜினா கசான்ட்ரா நடிக்கிறார் என்கிற தகவல் வெளியாகியுள்ளது.


இதற்கு முன்னதாக இரண்டாம் கட்ட நடிகர்களுடன் மட்டுமே இணைந்து நடித்து வந்த ரெஜினா தற்போது தான் முதன்முறையாக முதல் கட்ட முன்னணி நடிகர் ஒருவருடன் இணைந்து நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த படத்தில் இரண்டு அஜித் இருக்கிறார்கள் என்றும் அதில் ஒருவருக்கு தான் ரெஜினா ஜோடியாக நடிக்கிறார் என்றும் கூட சொல்லப்படுகிறது