ஜெயிலர் படத்தின் மிகப்பெரிய வெற்றியை தொடர்ந்து அதற்கு அடுத்ததாக தான் நடித்து வந்த லால் சலாம் படத்தின் படப்பிடிப்பையும் முடித்து விட்டார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். அவரது மகள் ஐஸ்வர்யா இயக்கியுள்ள இந்த படத்தில் விஷ்ணு விஷால், விக்ராந்த் இருவரும் கதாநாயகர்களாக நடிக்க மொய்தீன் பாய் என்கிற முக்கிய வேடத்தில் நடித்துள்ளார் ரஜினிகாந்த்.


இந்த படம் டிசம்பர் மாதம் வெளியாகும் என தெரிகிறது. இந்த நிலையில் ஜெய் பீம் புகழ் இயக்குனர் டிஜே ஞானவேல் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிக்கும் தலைவர் 170 என பெயரிடப்பட்ட படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் திருவனந்தபுரத்தில் துவங்கியது.


கிட்டத்தட்ட 10 நாட்கள் அங்கே படப்பிடிப்பு நடைபெற்ற நிலையில் தற்போது அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக திருநெல்வேலி பகுதியில் களமிறங்கியுள்ளது தலைவர் 170 படக்குழு. இதற்காக திருவனந்தபுரத்தில் இருந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் காரிலேயே பயணித்து திருநெல்வேலிக்கு வந்த வீடியோக்களும் அவருக்கு ரசிகர்கள் உற்சாக வரவேற்பு கொடுத்த காட்சிகளும் சோசியல் மீடியாவில் வைரலாக பரவி வருகின்றன.
திருநெல்வேலியில் பனகுடி என்கிற இடத்தில்தான் தலைவர் 170 பட காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன என சொல்லப்படுகிறது.