தனுஷ் நடிப்பில் கடந்த வருடம் திருச்சிற்றம்பலம் படம் வெளியானது. மித்ரன் ஜவகர் இயக்கிய இந்த படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நித்யா மேனன், பிரியா பவானி சங்கர், ராசி கண்ணா என மூன்று கதாநாயகிகள் நடித்திருந்தனர். அப்பாவாக பிரகாஷ்ராஜும் தாத்தாவாக பாரதிராஜாவும் நடித்திருந்தனர்.

அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார். மிகப்பெரிய எதிர்பார்ப்பு எதுவும் இல்லாமல் வெளியான இந்த படம் ரசிகர்களின் வரவேற்பை பெற்று மிகப்பெரிய அளவில் வசூலை வாரிகே குவித்தது. தனுஷிற்கு கடந்த வருடம் மிகப்பெரிய வெற்றி படமாகவும் அமைந்தது.

அதைத் தொடர்ந்து வழக்கம் போல ஒடிடி தளத்திலும் இந்த படம் தமிழில் வெளியானது. இந்த நிலையில் தற்போது இன்னொரு ஒடிடி தளத்தில் தமிழ் மட்டுமல்லாது மலையாளம், கன்னடம், தெலுங்கு மற்றும் ஹிந்தி ஆகிய மொழிகளில் 243 நாடுகளில் பார்க்கும் விதமாக வெளியாகி உள்ளது திருச்சிற்றம்பலம்.