HomeNewsKollywoodவெறித்தனமான வேகத்தில் லியோ டிரைலருக்கான வரவேற்பு

வெறித்தனமான வேகத்தில் லியோ டிரைலருக்கான வரவேற்பு

தமிழ் சினிமாவில் மட்டுமல்ல பாலிவுட் வரை தற்போது அதிகம் எதிர்பார்க்கப்படுவது லோகேஷ் கனகராஜ் விஜய் கூட்டணியில் உருவாகியுள்ள லியோ திரைப்படத்தை பற்றி தான். தொடர் வெற்றிகளாக கொடுத்து வரும் இயக்குனர் லோகேஷ் கனகராஜ், மாஸ்டர் படத்தை தொடர்ந்து மீண்டும் விஜய்யுடன் இணைந்து இருப்பதால் இந்த படத்திற்கான எதிர்பார்ப்பு மும்மடங்கு அதிகமாக உள்ளது. வரும் அக்-19ஆம் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறது என முன்கூட்டியே அறிவிக்கப்பட்டு விட்டது.

அதற்கு ஏற்றபடி படப்பிடிப்பு, போஸ்ட் புரொடக்சன் பணிகள் அனைத்தும் முடிவடைந்து சமீபத்தில் சென்சார் போர்டிடம் இருந்து யு/ஏ சான்றிதழும் பெற்றுள்ளது. இந்த நிலையில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட லியோ படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.

வழக்கமாக விஜய் ரசிகர்கள் மட்டுமே அவரது படத்தின் டிரைலர்களை ஆவலாக பார்த்து வந்த நிலையில் இது லோகேஷ் கனகராஜ் படம் என்பதால் அனைத்து தரப்பு ரசிகர்களும் இந்த டிரைலரை ஆர்வமாக பார்த்து வருகின்றனர். அதனாலேயே இந்த படத்தின் டிரைலர் 24 மணி நேரத்தில் 30 மில்லியன் பார்வையாளர்களால் பார்க்கப்பட்டு மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளது.

அனிருத்தின் இசை, அர்ஜுன், சஞ்சய் தத், த்ரிஷா என முக்கிய நட்சத்திரங்களின் பங்களிப்பு, வழக்கமான லோகேஷ் பாணியிலான அதிரடி ஆக்சன் எல்லாமாக சேர்ந்து லியோ திரைப்படம் ரசிகர்களுக்கு ஒரு மாஸ் விருந்தாக இருக்கும் என்பதை டிரைலர் தெளிவாக கூறியிருக்கிறது.

- Advertisment -
V4UMEDIA

Most Popular

Recent Comments