V4UMEDIA
HomeNewsKollywoodலியோ படத்தின் தமிழ்-இந்தி போஸ்டர்கள் வெளியானது

லியோ படத்தின் தமிழ்-இந்தி போஸ்டர்கள் வெளியானது

மாஸ்டர் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இருவரும் மீண்டும் இணைந்துள்ள படம் லியோ. அது மட்டுமல்ல நீண்ட இடைவெளிக்கு பிறகு நடிகை திரிஷாவும் விஜய்யும் இணைந்து நடிக்கும் படமும் கூட. இந்த படத்தில் இயக்குனர்கள் மிஷ்கின், கௌதம் வாசுதேவ் மேனன் மற்றும் சஞ்சய் தத் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்துள்ளனர்.

கடந்த ஜனவரியில் இந்த படத்தின் படப்பிடிப்பு காஷ்மீரில் துவங்கி கிட்டத்தட்ட 50 நாட்கள் வரை ஒரே கட்டப்படிப்பாக நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து சென்னை மற்றும் ஹைதராபாத் உள்ளிட்ட பல இடங்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு மாறி மாறி நடைபெற்றது.

வரும் அக்டோபர் 19ஆம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆக இருக்கும் நிலையில்  இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இன்னொரு பக்கம் இந்த படத்தின் பிரமோஷன்  நிகழ்ச்சிகளும் துவங்கி உள்ளன.

அதன்படி கடந்த சில தினங்களுக்கு முன்பு லியோ படத்தின் தெலுங்கு போஸ்டர் வெளியாகி வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் தற்போது இந்த படத்திற்கான தமிழ் மற்றும் ஹிந்தி போஸ்டர்கள் வெளியிடப்பட்டுள்ளன.

குறிப்பாக  பாலிவுட் நடிகர் சஞ்சய் தத்துடன் ஆக்ரோசமாக விஜய்  மோதுவது போன்ற  ஒரு   போஸ்டர் ஹிந்தி வெர்ஷனுக்காக   வடிவமைக்கப்பட்டுள்ளது.

Most Popular

Recent Comments