அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் ஹிந்தியில் உருவாகியுள்ள படம் ஜவான் மணிரத்னத்திற்கு அடுத்ததாக நடிகர் ஷாருக்கான் ஒரு தமிழ் பட இயக்குனர் டைரக்சனின் நடிக்கிறார் என்றால் அது அட்லீயாக தான் இருக்கும் நயன்தாரா, விஜய்சேதுபதி, யோகி பாபு என தமிழ் நட்சத்திர கலைஞர்களும் அனிருத், ரூபன் என முன்னணி தொழில்நுட்ப கலைஞர்களும் இந்த படத்தின் மூலம் பாலிவுட்டிலும் அடியெடுத்து வைத்துள்ளனர்,
அது மட்டுமல்ல இந்த படத்திற்காக பாடல் காட்சிகளை நடன வடிவமைப்பு செய்வதற்காக பிரபலமான ஷோபி மாஸ்டரையும் உடன் அழைத்துச் சென்றுள்ளார் அட்லீ. சமீபத்தில் வெளியான இந்த படம் கிட்டத்தட்ட 1000 கோடி ரூபாய் வசூலை நெருங்க இருக்கிறது.
இந்த நிலையில் இந்த படத்தில் இருந்து பட்டாசா என்கிற பாடல் வெளியாகி உள்ளது இந்த பாடல் குறித்து ஷாருக்கான் கூறும்போது, “நான் தீபிகா படுகோனுடன் எத்தனையோ பாடல்களுக்கு இணைந்து நடனம் ஆடியுள்ளேன்.. ஆனால் இதுபோன்று மனதுக்கு மிக நெருக்கமான ஒரு பாடலில் இப்போது தான் முதன்முறையாக நடித்துள்ளேன். இதற்காக இயக்குனர் அட்லீக்கு எனது நன்றி” என தெரிவித்துள்ளார் ஷாருக்கான். அட்லீயும் பதிலுக்கு தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தி உள்ளார்.