HomeNewsKollywoodதிரிஷாவின் ‘தி ரோடு’ ட்ரெய்லர் வெளியானது ; ரிலீஸ் தேதியும் அறிவிப்பு

திரிஷாவின் ‘தி ரோடு’ ட்ரெய்லர் வெளியானது ; ரிலீஸ் தேதியும் அறிவிப்பு

நடிகை திரிஷா சினிமாவில் நுழைந்து சமீபத்தில் தான் 20 வருடங்களை வெற்றிகரமாக தொட்டுள்ளார். அதற்கு மகுடம் சூட்டும் விதமாக சமீபத்தில் வெளியான பொன்னியின் செல்வன் 2 படத்தில் மீண்டும் அவரது நடிப்பிற்கு பாராட்டுக்கள் கிடைத்து வருகின்றன. இன்னொரு பக்கம் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய்யுடன் பல வருடங்களுக்குப் பிறகு இணைந்து லியோ படத்தில் நடித்து வருகிறார் த்ரிஷா.

அதே சமயம் இதற்கு முன்னதாக திரிஷா கதையின் நாயகியாக நடித்திருந்த ராங்கி திரைப்படம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியானது. அதேபோன்று கதையின் நாயகியாக திரிஷா நடித்துள்ள இன்னொரு படம் தான் தி ரோடு.

இந்த படத்தை அறிமுக இயக்குனர் அருண் வசீகரன் என்பவர் இயக்கியுள்ளார். கதாநாயகனாக சந்தோஷ் பிரதாப் நடிக்க, முக்கிய வேடங்களில் சார்பட்டா பரம்பரை புகழ் டான்சிங் ரோஸ் சபீர், நடிகை மியா ஜார்ஜ், எம்.எஸ் பாஸ்கர், வேலராமமூர்த்தி, விவேக் பிரசன்னா உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். சாம் சி எஸ் இந்த படத்துக்கு இசை அமைத்துள்ளார்

நீண்ட நாட்களாகவே இந்த படம் எப்போது வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டு வந்த நிலையில் தற்போது அக்டோபர் 6-ஆம் தேதி இந்த படம் ரிலீஸ் ஆக இருக்கிறது என அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.  இதை முன்னிட்டு இந்த படத்தின் டிரைலரும் தற்போது  வெளியாகியுள்ளது.

- Advertisment -
V4UMEDIA

Most Popular

Recent Comments