V4UMEDIA
HomeNewsKollywoodஇயக்குனரையே கண்ணீர் விட்டு அழவைத்த இறுகப்பற்று ;  ஒளிப்பதிவாளர் சொன்ன ஆச்சரிய தகவல் 

இயக்குனரையே கண்ணீர் விட்டு அழவைத்த இறுகப்பற்று ;  ஒளிப்பதிவாளர் சொன்ன ஆச்சரிய தகவல் 

மாயா, மாநகரம்,  மான்ஸ்டர் உள்ளிட்ட  வித்தியாசமான வெற்றி படைப்புகளை கொடுத்த நிறுவனம்  பொட்டன்ஷியல் ஸ்டுடியோஸ் இந்த நிறுவனத்தின் புதிய தயாரிப்பாக  உருவாகி வரும் படம்  இறுகப்பற்று.

விக்ரம் பிரபு, விதார்த், ஸ்ரீ, ஷ்ரத்தா ஸ்ரீநாத், அபர்ணதி, சானியா ஐயப்பன் உள்ளிட்ட நட்சத்திரங்கள் நடித்துள்ள இந்த படத்தை யுவராஜ் தயாளன் இயக்கியுள்ளார். இவர் ஏற்கனவே வடிவேலு நடித்த எலி, தெனாலிராமன் ஆகிய படங்களை  இயக்கியவர்.

இந்த படத்திற்கு  ஒளிப்பதிவாளராக கோகுல்  பினாய்  பணியாற்றியுள்ளார் இவர் பெரும்பாலும் பொட்டன்ஷியல் ஸ்டுடியோ, ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனங்களில் ஆஸ்தான ஒளிப்பதிவாளர் போல பல படங்களுக்கு பணியாற்றி வருபவர்.

இந்த படத்தில் பணியாற்றிய அனுபவம் குறித்து ஒளிப்பதிவாளர் கோகுல்  பினாய்  கூறும்போது, “படப்பிடிப்பின்போது ஒவ்வொரு காட்சியையும் யுவராஜ் நடித்து காட்டுவார். இதுவரை நான் பணியாற்றிய படங்களில் இருந்து இது வித்தியாசமாக இருந்தது.  சில நேரங்களில் இங்கே காட்சி படமாக்கி கொண்டிருக்கும்போது  மானிட்டரின் பக்கத்திலிருந்து அழுகை சத்தம் கேட்கும்.. பார்த்தால் யுவராஜ் தயாளனும் அந்த காட்சியை பார்த்தபடி  கண்கலங்கி கொண்டு இருப்பார். அந்த அளவிற்கு இந்த  கதாபாத்திரங்களை அவர் வடிவமைத்துள்ளார்.

அவர் மட்டுமல்ல படத்தைப் பார்க்கும் ஒவ்வொருவருமே இந்த படத்தில்  இடம்பெற்றுள்ள கதாபாத்திரங்களை பார்க்கும்போது, அதில் ஏதோ ஒருவராகவே தங்களை தொடர்புபடுத்திக் கொள்வார்கள். இன்னும் சொல்லப்போனால் படத்தில் விக்ரம் பிரபு, விதார்த், ஸ்ரீ என மூன்று கதாபாத்திரங்கள் இருந்தாலும் கூட  படம் பார்க்கும் ரசிகர்  படம் பார்க்கும் ரசிகர்  அவர்களின்   ஒவ்வொருவரின் குணாதிசயங்களையும்  தாங்கள் ஒவ்வொரு காலகட்டத்தில் பிரதிபலித்து இருப்பதையும் உணர்வார்கள்.

குறிப்பாக  படம் பார்க்கும்  தம்பதியினர்  நிச்சயமாக ஏதோ ஒரு இடத்தில்  கண் கலங்குவார்கள். எடிட்டிங் சமயத்தில் படம் பார்த்தபோது என்னுடன் அமர்ந்திருந்த புதிதாக திருமணமான என் உதவியாளர் சில காட்சிகளில்  கண்ணீரை அடக்க முடியாமல் அருகில் இருந்த டிஷ்யூ பேப்பரை எடுத்து அடிக்கடி  கண்களை  துடைத்துக் கொண்டதை பார்க்கும்போதே இதை உணர முடிந்தது”  என்கிறார்.

Most Popular

Recent Comments