கடந்த வருடம் இயக்கத்தில் வெளியான பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் பல முன்னணி நடிகர்கள்நடிப்பதற்கு வாய்ப்பு பெற்றாலும் அவர்கள் எல்லோரையும் விட பொன்னியின் செல்வன் கதாபாத்திரத்தில் நடித்த ஜெயம் ரவி தான் அதிகம் பேசப்பட்டார்.
குறிப்பாக இந்த வருடம் வெளியான அந்த படத்தின் இரண்டாம் பாகத்தில் அவருக்கு இன்னும் மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்பட்டிருந்தது. இந்த இரண்டு பாகங்களின் வெற்றியை தொடர்ந்து இந்த வருடம் அவரது படங்கள் அடுத்தடுத்து வெளியாகும் என எதிர்பார்க்கப்பட்டு வந்தது.
அந்த வகையில் சில மாதங்களுக்கு முன்பு வெளியான அகிலன் திரைப்படம் பெரிய வரவேற்பு பெற தவறியது. இதைத்தொடர்ந்து சைரன், இறைவன் ஆகிய படங்கள் ஜெயம் ரவி நடிப்பில் வெளியாக இருக்கின்றன. இன்னொரு பக்கம் அவர் நடிக்கும் புதிய படங்களின் படப்பிடிப்பும் துவக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் தற்போது அவர் எம்.ராஜேஷ் இயக்கத்தில் பிரதர் என்கிற படத்தில் நடித்து வருகிறார் இந்த படத்தில் பிரியங்கா மோகன் நாயகியாக நடிக்க, நட்டி, பூமிகா, சரண்யா பொன்வண்ணன், விடிவி கணேஷ், சீதா, அச்யுத், ‘கே ஜி எஃப்’, ‘புஷ்பா’ புகழ் பிரபல தெலுங்கு நடிகர் ராவ் ரமேஷ் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.
‘பிரதர்’ திரைப்படத்திற்காக ‘ஒரு கல் ஒரு கண்ணாடி’க்குப் பிறகு இயக்குநர் ராஜேஷும் இசையமைப்பாளர் ஹாரிஸ் ஜெயராஜும் மீண்டும் இணைந்துள்ளதால் இதன் பாடல்கள் பெரிதும் எதிர்பார்க்கப்படுகிறது.
‘பிரதர்’ குறித்து பேசிய இயக்குநர் எம்.ராஜேஷ், “ஆக்ஷன் ததும்பும் வித்தியாசமான திரைப்படங்களில் ஜெயம் ரவி தற்போது நடித்து முத்திரை பதித்து வந்தாலும் ‘ஜெயம்’, ‘எம் குமரன் சன் ஆஃப் மகாலட்சுமி’, ‘சம்திங் சம்திங் உனக்கும் எனக்கும்’, மற்றும் ‘சந்தோஷ் சுப்பிரமணியம்’ ஆகிய குடும்ப கதையம்சம் உள்ள திரைப்படங்கள் அவரது திரையுலக பயணத்தில் மிகவும் முக்கியமானவை. இந்த வரிசையில் ‘பிரதர்’ இணையும் என்பதில் சந்தேகம் இல்லை,” என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “சென்னை, ஹைதராபாத், ஊட்டி மற்றும் கொடைக்கானல் உள்ளிட்ட இடங்களில் இப்படத்தின் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது