HomeNewsKollywoodஇத்தனை வருடங்களில் நடித்திராத புதிய கதாபாத்திரத்தில் நடிக்கும் மீனா

இத்தனை வருடங்களில் நடித்திராத புதிய கதாபாத்திரத்தில் நடிக்கும் மீனா

இன்றைய திரையுலகில்  இருக்கும் நடிகைகளில் மிக அதிக வருடங்கள் சினிமாவில்  பயணித்து வருபவர் நடிகை மீனா. குழந்தை நட்சத்திரமாக நடிக்க துவங்கி பின்னர் கதாநாயகியாக  நடித்தவர்  ஒரு கட்டத்தில்  திருமணம் செய்து கொண்டு  குடும்ப வாழ்க்கையில் செட்டிலானார். அப்போதும்  தன்னை தேடி வரும் நல்ல கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வந்தார். ஆனால் அது கூட தமிழில் அவர் அப்படி செய்யவில்லை.. மலையாள திரை உலகில் மட்டும்  நல்ல படங்களில் நடிக்க வந்தார்..

அந்த வகையில் அவர் நடித்த திரிஷ்யம் படத்தின் இரண்டு பாகங்களும் மிகப்பெரிய வெற்றி பெற்றது. இதனால் மலையாள திரை உலகில்  எப்போதுமே மீனாவுக்கு நல்ல கதாபாத்திரங்களாக தேடி வருவது வழக்கம் தான். அந்தவகையில் ஒரு சிறிய இடைவெளிக்கு பிறகு தற்போது மீண்டும்  மலையாளத்தில்  ஆனந்தபுரம் டைரிஸ் என்கிற ஒரு படத்தில் நடிக்கிறார்.

இந்த படத்தில் இவர் ஒரு சட்டக் கல்லூரி மாணவியாகவும்  வழக்கறிஞராகவும்  நடிக்கிறார். இதற்கு முன்பு இத்தனை வருடங்களில் அவர் இது போன்று ஒரு கதாபாத்திரத்தில்  நடித்ததே இல்லை. 

இவருடன் நம்ம ரோஜாக்கூட்டம் ஸ்ரீகாந்த் முக்கிய கதாபாத்திரத்தில்  நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு தற்போது கேரளாவில் நடைபெற்று வருகிறது. 

- Advertisment -
V4UMEDIA

Most Popular

Recent Comments