மலையாள திரையுலகில் இதற்கு முன்பாக மோகன்லாலின் படங்கள் வெளியான போது திரிஷ்யம் படத்திற்கு மட்டுமே மிகப்பெரிய அளவில் இங்கே தமிழகத்திலும் எதிர்பார்ப்பு இருந்தது. ஆனால் தற்போது அவர் நடித்துள்ள மலைக்கோட்டை வாலிபன் என்கிற படத்திற்கு தென் இந்திய அளவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது.
மல்யுத்தத்தை மையமாக வைத்து உருவாகியுள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு பாண்டிச்சேரி, சென்னை, ராஜஸ்தான் ஆகிய இடங்களில் 130 நாட்களில் நடைப்பெற்று நிறைவடைந்தது
![](https://v4ucinema.com/wp-content/uploads/2023/09/malaikottai-Valiban.jpg)
இந்த நிலையில் இந்த திரைப்படம் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் 25ஆம் தேதியன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது.
இப்படத்தின் இயக்குநரான லிஜோ ஜோஸ் பெல்லிசேரியின் பிறந்த நாளன்று ‘மலைக்கோட்டை வாலிபன்’ படத்தின் வெளியீட்டு தேதியை படத்தின் நாயகன் மோகன்லாலே அறிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது