ஆகஸ்ட் மாதம் வெளியான சூப்பர் ஸ்டார் ரஜினியின் ஜெயிலர் திரைப்படம் 600 கோடிக்கு மேல் வசூலித்து பாக்ஸ் ஆபிஸை சிதறடித்தது. இந்த நிலையில் இந்த செப்டம்பர் மாதம் அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான் நடிப்பில் ஹிந்தியில் வெளியான ஜவான் திரைப்படம் மீண்டும் ஒருமுறை பாக்ஸ் ஆபிஸ் வசூலில் பல புதுப்புது சாதனைகளை படைத்து வருகிறது.

இப்படம் வெளியான 11 நாட்களில் 858.68 கோடிகளை குவித்து, 800 கோடி என்கிற மைல்கல்லை மிக வேகமாக தாண்டிய இந்திய திரைப்படம் என்ற குறிப்பிடத்தக்க சாதனையையும் படைத்துள்ளது.
ஜவானின் உலகளாவிய ஆதிக்கம் இத்துடன் நிறைவடையவில்லை.. ComScore அறிக்கையின்படி, உலகளாவிய பாக்ஸ் ஆபிஸ் டாப் 10 வார இறுதி அட்டவணையில் இப்படம் 3வது இடத்திற்கு உயர்ந்துள்ளது.