V4UMEDIA
HomeNewsKollywoodஇயக்குனராக மாறிய நடிகை சோனா 

இயக்குனராக மாறிய நடிகை சோனா 

கடந்த சில வருடங்களுக்கு முன்பு தமிழ் சினிமாவில் கவர்ச்சி நடிகையாக  வலம் வந்தவர் நடிகை சோனா. குறிப்பாக குசேலன் படத்தில் வடிவேலுவின் ஜோடியாக நடித்து இன்னும் அதிக அளவில் ரசிகர்களிடம் பிரபலமானார். சில படங்களில் காமெடி நடிகையாகவும் நடித்திருந்தார்.

இடையில் கொஞ்ச நாட்கள் திரையுலகையை விட்டு ஒதுங்கியிருந்த இவர் தற்போது திடீரென இயக்குனராக மாறியுள்ளார். ஆனால் இவர் இயக்கப்போவது திரைப்படத்தை அல்ல.. வெப் சீரிஸ் ஒன்றைத்தான்.  அதற்கு  ஸ்மோக் என டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

முதலில் தனது வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளை மையமாக வைத்து ஒரு படமாக எடுக்க வேண்டும் என நினைத்திருந்த சோனா, தற்போது அதில் சிறிய மாற்றம் செய்து குறிப்பிட்ட சில நிகழ்வுகளை மையப்படுத்தி இந்த வெப் சீரிசை  இயக்க  உள்ளார் என்று சொல்லப்படுகிறது.

Most Popular

Recent Comments