V4UMEDIA
HomeNewsKollywoodபாகுபலி  தயாரிப்பாளர் போல தான் வெப்பன் பட  தயாரிப்பாளரும் ;  புகழாரம் சூட்டிய சத்யராஜ் 

பாகுபலி  தயாரிப்பாளர் போல தான் வெப்பன் பட  தயாரிப்பாளரும் ;  புகழாரம் சூட்டிய சத்யராஜ் 

அஸ்வின், ஜெயிலர் என தொடர்ந்து வெற்றி படங்கள் மூலம் ரசிகர்களின் கவனம் ஈர்த்து வருபவர் நடிகர் வசந்த் ரவி.  இவரது நடிப்பில் அடுத்ததாக வெளியாக இருக்கும் படம் வெப்பன்.

இந்த படத்தில் சத்யராஜ் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க,  நடிகை தான்யா ஹோப்  கதாநாயகியாக  நடித்துள்ளார்,  குகன் சென்னியப்பன்  இந்த படத்தை இயக்கியுள்ளார், புதிய டெக்னாலஜியில் வெளியீட்டிற்குத் தயாராகி வரும் இந்தப் படத்தை மில்லியன் ஸ்டுடியோ மன்சூர் தயாரித்துள்ளார்,

இந்த படம் விரைவில் வெளியாக உள்ளதை தொடர்ந்து மும்பையில் நடைபெற்ற இந்த படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் படக்குழுவினர் கலந்து கொண்டு  படம் குறித்த தகவல்களை பகிர்ந்து கொண்டனர்.

இந்த நிகழ்வில் நடிகர் சத்யராஜ் பேசும்போது, “இது போன்ற கதைகளில் நாங்கள் ஹீரோக்கள் இல்லை. இயக்குநர், ஒளிப்பதிவாளர், ஸ்டண்ட் மாஸ்டர், ஸ்பெஷல் எபெக்ட்ஸ் டீம், தயாரிப்பாளர்கள் இவர்கள்தான் ரியல் ஹீரோஸ்.  இதுபோன்ற படங்களுக்கு தயாரிப்பாளர் எந்தவிதமான தயக்கமும் இல்லாமல் செலவு செய்ய வேண்டும்.

‘பாகுபலி’படத்தின் போது தயாரிப்பாளர் சோபுவை பார்த்து பிரபாஸ் என்னிடம் விளையாட்டாக, ‘பாருங்க சார், யாரோ பணம் போட்டு படம் எடுப்பது போல ஜாலியாக வந்து போகிறார்’ என்று சொல்வார். அதே போலவே மன்சூர் சாரும் உள்ளார். வசந்த் ரவி, தான்யா ஹோப், ராஜீவ் மேனன், ராஜீவ் பிள்ளை எல்லாரும் சிறப்பாக செய்துள்ளனர்”  என்றார்.

Most Popular

Recent Comments