V4UMEDIA
HomeNewsKollywoodகங்கனாவின் நடிப்பை பாராட்டிய  ஒரிஜினல் சந்திரமுகி

கங்கனாவின் நடிப்பை பாராட்டிய  ஒரிஜினல் சந்திரமுகி

 சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் பி.வாசு இயக்கத்தில் கடந்த 18 வருடங்களுக்கு முன்பு வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற படம் சந்திரமுகி. இந்த   படத்தின் இரண்டாம் பாகம் தற்போது சந்திரமுகி 2 என்கிற பெயரில்  உருவாகியுள்ளது.  பி.வாசு இயக்கியுள்ள இந்த படத்தில் கதாநாயகனாக ராகவா நடித்துள்ளார்.

கதாநாயகியாக சந்திரமுகி கதாபாத்திரத்தில் பாலிவுட் நடிகை கங்கணா ரணவத்  நடித்துள்ளார். சமீபத்தில் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது. வரும் செப்டம்பர் 15ஆம் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறது.

முதல் பாகத்தில் கங்கா, சந்திரமுகி என இரண்டு கதாபாத்திரங்களில் நடித்து சந்திரமுகியாக ரசிகர்களை மிரட்டியவர் ஜோதிகா. இந்த இரண்டாம் பாகத்தில் கங்கனா எப்படி  சந்திரமுகியாக மாறியுள்ளார் என பார்ப்பதற்கு ரசிகர்கள் ஆவலாக இருக்கின்றனர்.

இந்த நிலையில் சந்திரமுகி’ படத்தில் சந்திரமுகியாக நடித்திருந்த ஜோதிகா, ‘சந்திரமுகி 2’ படத்தில் சந்திரமுகியாக நடித்திருக்கும் கங்கனா ரனாவத்தைப் பாராட்டி சமூக ஊடகத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டிருக்கிறார்.

அதில், ‘ இந்திய சினிமாவில் மிகவும் திறமையான நடிகைகளில் ஒருவரான கங்கனா ரனாவத், சந்திரமுகி கதாபாத்திரத்தில் நடிப்பதை கண்டு மிகவும் பெருமையடைகிறேன். சந்திரமுகி கதாபாத்திரத்தில் நீங்கள் கவர்ச்சியாக தோற்றமளிக்கிறீர்கள். நான் உங்கள் ரசிகை. இந்த திரைப்படத்தில் உங்களின் நடிப்பை காண ஆவலுடன் காத்திருக்கிறேன். லாரன்ஸ் மாஸ்டருக்கும், இயக்குநர் பி..வாசு சாருக்கும் மீண்டும் ஒரு மாபெரும் வெற்றி கிடைக்க வாழ்த்துக்கள்.” என பதிவிட்டிருக்கிறார்.

Most Popular

Recent Comments