கடந்த சில மாதங்களாகவே நடிகர் விஜய் ஆண்டனியின் படங்கள் தொடர்ந்து வெளியாகி வருகின்றன. நீண்ட நாட்களுக்கு முன்பே தயாராகி இருந்த அவரது தமிழரசன் திரைப்படம் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு வெளியானது. அதைத் தொடர்ந்து விஜய் ஆண்டனியின் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படமான பிச்சைக்காரன் படத்தின் இரண்டாம் பாகம் வெளியானது.
முதல் பாகத்தைப் போல மிகப் பெரிய வெற்றி இல்லை என்றாலும் டீசன்டான வரவேற்பை பெற்றது. இந்த படத்தை விஜய் ஆண்டனியே இயக்கியும் இருந்தார். அதை தொடர்ந்து ஒரு இன்வெஸ்டிகேஷன் திரில்லராக மிகப்பெரிய வெற்றியை பெரும் என எதிர்பார்க்கப்பட்ட விஜய் ஆண்டனியின் கொலை திரைப்படமும் கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெளியானது. ஆனால் எதிர்பார்த்த வரவேற்பை பெற தவறியது.
இந்த நிலையில் தான் விஜய் ஆண்டனி நடித்துள்ள ரத்தம் திரைப்படம் அடுத்ததாக ரிலீசுக்கு தயாராகி உள்ளது. வரும் செப்டம்பர் 28ஆம் தேதி இந்த படம் வெளியாகும் என தற்போது அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் மஹிமா நம்பியார், நந்திதா ஸ்வேதா ஆகியோர் நடித்துள்ளனர்.
இந்த படத்தை இயக்குனர் சி.எஸ் அமுதன் இயக்கியுள்ளார். இவர் தமிழ் படம் இரண்டு பாகங்களையும் இயக்கி வரவேற்பை பெற்றவர். முதன் முறையாக ரத்தம் என்கிற கமர்சியல் ஆக்சன் படத்தில் இறங்கியுள்ளார்