V4UMEDIA
HomeNewsKollywoodஆர்.எஸ் சிவாஜியின் கடைசி படமாக அமைந்த  சந்திரமுகி 2 

ஆர்.எஸ் சிவாஜியின் கடைசி படமாக அமைந்த  சந்திரமுகி 2 

சமீபத்தில்  நடிகர் ஆர்.எஸ் சிவாஜி  காலமான செய்தி  ரசிகர்கள் மத்தியிலும் திரையுலகிலும் சோகத்தை ஏற்படுத்தியது. கமல் நடித்த அபூர்வ சகோதரர்கள், மைக்கேல் மதன காமராஜன் உள்ளிட்ட படங்களில் நடித்து மிகவும் பிரபலமானவர் ஆர்.எஸ் சிவாஜி. குறிப்பாக அபூர்வ சகோதரர்கள் படத்தில்   அவர் நடித்திருந்த அந்த கான்ஸ்டபிள் கதாபாத்திரம் தான் அவரை மிகப் பெரிய அளவில் பிரபலம் ஆக்கியது.

அதைத் தொடர்ந்து ரஜினியுடன் மாப்பிள்ளை படத்தில் அவரது நண்பராகவும் நடித்திருந்தார். தொடர்ந்து சில படங்களில் நடித்தாலும் ஒரு குறிப்பிட்ட காலகட்டங்களில் படங்களில் நடிக்காமல் ஒதுங்கி இருந்த அவர் மீண்டும்  நயன்தாரா நடித்த கோலமாவு கோகிலா, சாய் பல்லவியின் தந்தையாக கார்கி  உள்ளிட்ட படங்களில் நடித்து மீண்டும் பிஸியான நடிகராக, குறிப்பாக குணசத்திர நடிகராக மாறினார்.

இப்போதும் அவரது நடிப்புக்கு ரசிகர்களிடம் வரவேற்க  கிடைக்கவே செய்தது.  இந்த நிலையில்   விரைவில் வெளியாக உள்ள சந்திரமுகி 2 படத்திலும் முக்கிய கதாபாத்திரத்தில் ஆர்.எஸ் சிவாஜி நடித்துள்ளார். அவர் மறைந்த தினத்தன்றுதான் இந்த படத்தின் டிரைலரும் வெளியானது. படத்தில் வடிவேலுவுடன் இணைந்து காமெடி காட்சிகளில் நடித்துள்ளார்  ஆர்.எஸ் சிவாஜி

Most Popular

Recent Comments