HomeNewsKollywoodடிரைலர் சாதனையில் முந்தும் மார்க் ஆண்டனி

டிரைலர் சாதனையில் முந்தும் மார்க் ஆண்டனி

தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து வெளியாக இருக்கும் படங்களில் மிகவும் எதிர்பார்க்கப்படுபவை என்றால் சந்திரமுகி 2,  மார்க் ஆண்டனி மற்றும் ஜெயம் ரவியின் இறைவன் ஆகிய படங்கள் தான். இந்த மாதத்திலேயே இந்த படங்கள் வெளியாக உள்ள நிலையில் இந்த படத்தின் டிரைலர்கள் சமீபத்தில்  வெளியிடப்பட்டன.

இதில் ஆச்சரியம் என்று என்னவென்றால் இந்த மூன்று டிரைலர்களும் ஒரே நாளில் வெளியாகின.  இதில் அதிகம் எதிர்பார்க்கப்படும் படமாக சந்திரமுகி 2  இருந்தது. அதை தொடர்ந்து விஷாலும் எஸ்.ஜே சூர்யாவும் கூட்டணி சேர்ந்துள்ளதால் மார்க் ஆண்டனி படத்திற்கும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு இருக்கிறது. ஜெயம் ரவியின் இறைவனும் அதே கணக்கில் தான் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால் டிரைலர் வெளியான பின்னர் நிலைமை அப்படியே தலைகீழாக மாறி  மார்க் ஆண்டனி படத்தின் டிரைலர் இதுவரை 20 மில்லியன் பார்வையாளர்களுக்கு மேல் பார்த்து  ரசிக்கப்பட்டுள்ளது.

அதே சமயம் ஜெயம் ரவியின் இறைவன் டிரைலர்இன்னும் பத்து மில்லியனை தொடவில்லை. சந்திரமுகி 2 படத்தின் டிரைலர் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் வெறும் ஏழு மில்லியனுக்கு பக்கத்தில் தான் அதன் பார்வையாளர்கள் எண்ணிக்கை இருக்கிறது.

குறிப்பாக விஷாலின் மார்க் ஆண்டனி திரைப்படத்தின் டிரைலர் இந்த அளவுக்கு வெற்றி பெற காரணம் மொத்த ட்ரைலருமே ஒரு ஜாலியான கலாட்டாவான பொழுதுபோக்கு அனுபவத்திற்கு   100% உத்தரவாதம் அளிக்கும் விதமாக இருப்பதால் ரசிகர்கள் மத்தியில் இது வரவேற்பு பெற்றுள்ளது.

குறிப்பாக எஸ் ஜே சூர்யாவுக்கு என ஒரு தனி ரசிகர் பட்டாளம் உருவாகியுள்ளது. மார்க் ஆண்டனி படத்தில் அவரும் இருப்பதால் அந்த படத்திற்கான எதிர்பார்ப்பு இரு மடங்காகி உள்ளது. 

- Advertisment -
V4UMEDIA

Most Popular

Recent Comments