சினிமாவில் சென்டிமென்ட் விஷயங்கள் காலங்காலமாக தொடர்ந்து கடைபிடிக்கப்பட்டு வருகின்றன. சிலர் அதை நம்பாமல் புறக்கணித்தாலும் பெரும்பாலும் சினிமாவை சேர்ந்தவர்கள் இதுபோன்ற நம்பிக்கைகளில் கடவுள் விஷயங்களில் கவனம் செலுத்தி தங்களது படப்பிடிப்பு குறித்த விஷயங்களை கவனித்து செய்து வருகின்றனர்.
இந்த நிலையில் நடிகர் விஷால் கதாநாயகனாக நடித்துள்ள மார்க் ஆண்டனி திரைப்படம் வரும் செப்டம்பர் 15ஆம் தேதி வெளியாகிறது. எஸ்.ஜே சூர்யா முக்கிய வேடத்தில் நடித்துள்ள நடித்துள்ள இந்த படத்தை ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கியுள்ளார். ஜி.வி பிரகாஷ் இசையமைத்துள்ளார். இந்த படத்தில் தனக்கு ஏற்பட்ட சிலிர்ப்பான அனுபவங்களையும் கடவுள் நம்பிக்கை எந்த அளவிற்கு முக்கியமானது என்பது குறித்தும் நடிகர் விஷால் நேரில் உணர்ந்த அனுபவத்தின் மூலம் சமீபத்தில் பகிர்ந்து கொண்டார்.
இதுபற்றி அவர் கூறும் போது கடவுள் விஷயத்தில் ஒருபோதும் விளையாடக் கூடாது. படப்பிடிப்பு நடத்தும்போது அதற்கான நெறிமுறையை கடைபிடித்து செய்ய வேண்டும். இந்த படத்தில் கருப்பண்ணசாமி சிலை முன்பாக ஒரு பக்கம் பெண்கள் நடனம் ஆடிக்கொண்டிருக்க, இன்னொரு பக்கம் சண்டைக்காட்சியும் படமாக்கப்பட்டது. இந்த படத்திற்காக கருப்பண்ணசாமியின் முகத்தை பெயிண்டர் வரைந்து முடிக்கும் முன்பே கீழே விழுந்து விட்டார்” என்றார்.
அதேபோல முதல் நாள், அடுத்த நாள் என படப்பிடிப்பை தொடங்கியதுமே மழை இடைவிடாமல் பெய்ததால் படப்பிடிப்பை ரத்து செய்யவேண்டிய நிலை ஏற்பட்டது. அதன் பிறகு கருப்பண்ணசாமிக்கு செய்ய வேண்டிய சுருட்டு, சாராயம், கறிசோறு என படையல் வைத்து அவரை வழிபட்டு விட்டு படப்பிடிப்பை நடத்தினோம்.