HomeNewsKollywoodகாசோலையுடன் காரும் வழங்கி சூப்பர் ஸ்டாரையும் நெல்சனையும்  கௌரவித்த கலாநிதி மாறன் 

காசோலையுடன் காரும் வழங்கி சூப்பர் ஸ்டாரையும் நெல்சனையும்  கௌரவித்த கலாநிதி மாறன் 

தமிழ் சினிமா இதுவரை பார்க்காத ஒரு மிகப்பெரிய வெற்றிலை  சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம்  பெற்றுள்ளது  சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன்   திலீப் குமார்  இயக்கத்தில்  வெளியான இந்த படத்திற்கு    அனிருத்தும்  தனது இசையால் மிகப்பெரிய  பக்கபலமாக  இருந்தார்  இந்த நிலையில் கடந்த சில நாட்களாகவே  விக்ரம் படம் வெற்றி பெற்றதற்காக  அந்த படத்தை இயக்குனர்  லோகேஷ் கனகராஜுக்கு  தயாரிப்பாளராக கமல்  கார் ஒன்றை பரிசாக வழங்கினார்  அதைவிட பெரிய வெற்றி   ஜெயிலர் படத்திற்கு கிடைத்துள்ள   நிலையில்  தயாரிப்பு நிறுவனம் இதுபோன்று எதுவும் பரிசு வழங்க வில்லையே என்று  சில விமர்சன கருத்துக்களை கூறி வந்தனர்  இந்த நிலையில் அவர்களது வாயை அடைக்கும் விதமாக  தயாரிப்பாளர் கலாநிதி மாறன்  சூப்பர் ஸ்டார்   ரஜினியை நேரில் சந்தித்து  இந்த படத்தின் வெற்றிக்காக  லாபத்தில் ஒரு பங்குத் தொகையை  காசோலையாக அவருக்கு வழங்கினார்  திரையுலக வரலாற்றில்  சன் பிக்சர்ஸ்  திரையுலக வரலாற்றில்  இப்படி நடப்பது இதுவே  முதல் முறை  அது மட்டுமல்ல சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வீட்டிற்கு  அழகிய இரண்டு பிஎம்டபிள்யூ  கார்களை கொண்டு வந்து நிறுத்தி  சூப்பர் ஸ்டாரை அழைத்து வந்து அதில் அவருக்கு பிடித்தமான  காரை தேர்வு செய்து கொள்ளுமாறு கூறி  அந்த நிகழ்வில் மூலம் ஒரு ரசிகராக சந்தோஷப்பட்டு உள்ளார்    தயாரிப்பாளர் கலாநிதி மாறன்  அது மட்டுமல்ல  இயக்குனர் நெல்சனுக்கும்  போர்சே  கார் ஒன்றை பரிசாக வழங்கியதுடன்  அவருக்கும்  இதற்கு முன் பேசிய  சம்பளத்தை விட  ஒரு குறிப்பிடத்தக்க  லாபத் தொகையை  காசோலையாக வழங்கி  அவரையும் இன்ப அதிர்ச்சியில்  திக்குமுக்காட வைத்துள்ளார்  கலாநிதி மாறன்  இந்த படம்  எந்த அளவிற்கு வெற்றி பெற்றிருந்தால் இப்படி ஒரு தயாரிப்பாளரை நேரில் வந்து படத்தின் ஹீரோவை  கவுரவிப்பார்  என்பதுதான் தற்போது திரையுலகிலும் ரசிகர்கள் மத்தியிலும் ஒரே   பேச்சாக இருக்கிறது

- Advertisment -
V4UMEDIA

Most Popular

Recent Comments