தமிழ் சினிமா இதுவரை பார்க்காத ஒரு மிகப்பெரிய வெற்றிலை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ஜெயிலர் திரைப்படம் பெற்றுள்ளது சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் வெளியான இந்த படத்திற்கு அனிருத்தும் தனது இசையால் மிகப்பெரிய பக்கபலமாக இருந்தார் இந்த நிலையில் கடந்த சில நாட்களாகவே விக்ரம் படம் வெற்றி பெற்றதற்காக அந்த படத்தை இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு தயாரிப்பாளராக கமல் கார் ஒன்றை பரிசாக வழங்கினார் அதைவிட பெரிய வெற்றி ஜெயிலர் படத்திற்கு கிடைத்துள்ள நிலையில் தயாரிப்பு நிறுவனம் இதுபோன்று எதுவும் பரிசு வழங்க வில்லையே என்று சில விமர்சன கருத்துக்களை கூறி வந்தனர் இந்த நிலையில் அவர்களது வாயை அடைக்கும் விதமாக தயாரிப்பாளர் கலாநிதி மாறன் சூப்பர் ஸ்டார் ரஜினியை நேரில் சந்தித்து இந்த படத்தின் வெற்றிக்காக லாபத்தில் ஒரு பங்குத் தொகையை காசோலையாக அவருக்கு வழங்கினார் திரையுலக வரலாற்றில் சன் பிக்சர்ஸ் திரையுலக வரலாற்றில் இப்படி நடப்பது இதுவே முதல் முறை அது மட்டுமல்ல சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் வீட்டிற்கு அழகிய இரண்டு பிஎம்டபிள்யூ கார்களை கொண்டு வந்து நிறுத்தி சூப்பர் ஸ்டாரை அழைத்து வந்து அதில் அவருக்கு பிடித்தமான காரை தேர்வு செய்து கொள்ளுமாறு கூறி அந்த நிகழ்வில் மூலம் ஒரு ரசிகராக சந்தோஷப்பட்டு உள்ளார் தயாரிப்பாளர் கலாநிதி மாறன் அது மட்டுமல்ல இயக்குனர் நெல்சனுக்கும் போர்சே கார் ஒன்றை பரிசாக வழங்கியதுடன் அவருக்கும் இதற்கு முன் பேசிய சம்பளத்தை விட ஒரு குறிப்பிடத்தக்க லாபத் தொகையை காசோலையாக வழங்கி அவரையும் இன்ப அதிர்ச்சியில் திக்குமுக்காட வைத்துள்ளார் கலாநிதி மாறன் இந்த படம் எந்த அளவிற்கு வெற்றி பெற்றிருந்தால் இப்படி ஒரு தயாரிப்பாளரை நேரில் வந்து படத்தின் ஹீரோவை கவுரவிப்பார் என்பதுதான் தற்போது திரையுலகிலும் ரசிகர்கள் மத்தியிலும் ஒரே பேச்சாக இருக்கிறது