தொடர்ந்து விஜய்யை வைத்து தெறி, மெர்சல், பிகில் என மூன்று படங்களை இயக்கிய அடுத்தடுத்து வெற்றியை கொடுத்தவர் இயக்குனர் அட்லீ. இதைத் தொடர்ந்து பாலிவுட்டிற்கு சென்று அங்கே முன்னணி ஹீரோவாக வலம் வரும் நடிகர் ஷாருக்கானை வைத்து தற்போது ஜவான் என்கிற படத்தை இயக்கியுள்ளார்.
இந்த படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்க விஜய்சேதுபதி வில்லனாக நடித்துள்ளார். யோகிபாபு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். அனிருத் இந்த படத்திற்கு இசையமைப்பதன் மூலம் பாலிவுட்டில் அடியெடுத்து வைத்துள்ளார். வரும் செப்டம்பர் 7ஆம் தேதி இந்த படம் வெளியாக உள்ள நிலையில் இதன் புரமோஷன் நிகழ்ச்சி தற்போது சென்னையில் நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் இயக்குனர் அட்லீ பேசும்போது, “நான்காண்டிற்கு முன்னால் இதே இடத்தில் ‘பிகில்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவில் உங்கள் அனைவரையும் சந்தித்தேன். ஜவான் படத்தின் பிரி ரிலீஸ் நிகழ்ச்சியை எங்கு நடத்துவது? என்ற விவாதம் நடைபெற்றது. சந்திராயன் 3 விண்கலத்தை வெற்றிகரமாக செலுத்தியதில் பங்காற்றிய வீர முத்துவேல் நினைவுக்கு வந்தார். அவர் இந்த கல்லூரியில் படித்த மாணவர் என்பதால்.. இதே இடத்தை மீண்டும் பெருமிதத்துடன் தேர்வு செய்தோம்.
இந்த திரைப்படத்தை நான் இயக்குவதற்கு முக்கிய காரணம் தளபதி விஜய் கொடுத்த ஊக்கம் தான். ’ராஜா ராணி’யில் தொடங்கிய வாழ்க்கையை ‘தெறி’, ‘மெர்சல்’, ‘பிகில்: என சௌகரியமான நிலையில் வாழ வைத்தது விஜய்ப் சார்தான்.
மும்பையிலிருந்து ஆலிஃப் என்ற நண்பர் ஷாருக்கான் உங்களை சந்திக்க வேண்டும் என தெரிவித்தார். நான் முதலில் நம்பவில்லை. பிறகு உண்மை தான் என்று தெரிந்தவுடன் ஷாருக் கானை சந்திக்க மும்பைக்கு சென்றேன்.
பத்து வருடத்திற்கு முன் இயக்குநர் ஷங்கரிடம் உதவியாளராக எந்திரன் படத்தில் பணியாற்றியபோது மற்றொரு உதவி இயக்குநரான ஆடம் தாஸ் படப்பிடிப்பு நடக்கும் வீதியில் உள்ள ஒரு வீட்டில் கேட்டின் முன் நிற்க வைத்து புகைப்படம் எடுத்தார். அந்த வீடு ஷாருக்கானுடையது. எனக்கு அது அப்போது தெரியாது. பத்தாண்டுகளுக்குப் பிறகு அதே கேட் எனக்காக திறந்தது. உள்ளே சென்று ஷாருக் கானை சந்தித்தேன்.
ஆண்டவன், அம்மா, மனைவி ஆகியோர்களை நிஜமாக நேசித்தால்.. கடவுள் நமக்கான சிறந்த வாய்ப்புகளை வழங்குவார்” என்று கூறியுள்ளார்