ஜி.வி பிரகாஷ் நடிப்பில் சமீபத்தில் அடியே என்கிற திரைப்படம் வெளியானது. இதைத் தொடர்ந்து அடுத்ததாக அவரது நடிப்பில் வெளியாக இருக்கும் படம் ‘டியர்’.
இந்த படத்தில் ஐஸ்வர்யா ராஜேஷ் கதாநாயகியாக நடித்துள்ளார். இயக்குனர் ஆனந்த் ரவிச்சந்திரன் இயக்கியுள்ள இந்த படத்தில் மேலும் காளி வெங்கட், இளவரசு, ரோகிணி, தலைவாசல் விஜய், கீதா கைலாசம், ‘ப்ளாக் ஷீப்’ நந்தினி உள்ளிட்ட பல முக்கிய நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.
ஜி.வி பிரகாஷே இந்த படத்திற்கு இசையமைக்கிறார். இந்த நிலையில் தமிழ் சினிமா ரசிகர்களின் ரசனைக்கு விருந்தளித்து வரும் ரோமியோ பிக்சர்ஸ் அடுத்ததாக ஜி.வி.பிரகாஷ் குமார்-ஐஸ்வர்யா ராஜேஷ் இணைந்து நடித்துள்ள “டியர்” படத்தினை தமிழகமெங்கும் வெளியிடுகிறது.
டியர் படத்தின் அனைத்துப் பணிகளும் முடிவடைந்த நிலையில் இசை மற்றும் டிரெய்லர் விரைவில் வெளியாகவுள்ளது. படத்தின் வெளியீட்டு தேதி குறித்த அறிவிப்பு விரைவில் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்படும்.