தெலுங்கு திரை உலகில் சீனியர் நடிகர் என்றாலும் தற்போதும் முன்னணி நட்சத்திரமாகவே படங்களில் நடித்து வருபவர் நடிகர் நாகார்ஜுனா. இவரது மகன்கள் இருவரும் திரை உலகில் நடிகர்களாக களம் இறங்கி விட்டாலும் இப்போதும் நாகார்ஜுனா அவர்களை விட பிஸியான நடிகராக நடித்து வருகிறார்.
தமிழில் ஆரம்பத்தில் மொழிமாற்று படங்கள் மூலம் தமிழ் ரசிகர்களின் மனதை வசியம் செய்தவர், அதன் பிறகு ரட்சகன், தோழா, பயணம் உள்ளிட்ட நேரடி தமிழ் படங்களிலும் நடித்தார்.
இந்த நிலையில் தனுஷ் தெலுங்கில் பிரபல இயக்குனர் சேகர் கம்முலா இயக்கத்தில் நடிக்க உள்ள படத்தில் நாகார்ஜுனாவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு இந்த செய்தி அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.