V4UMEDIA
HomeNewsKollywoodசந்திரமுகி 2 அனுபவங்கள் குறித்து கலகலப்பாக பகிர்ந்து கொண்ட கங்கனா ரணவத்

சந்திரமுகி 2 அனுபவங்கள் குறித்து கலகலப்பாக பகிர்ந்து கொண்ட கங்கனா ரணவத்

இன்று பாலிவுட்டில் பிரபல முன்னணி நடிகையாக வலம் வருபவர் நடிகை கங்கனா. ஆனால் கடந்த 15 வருடங்களுக்கு முன்பே தமிழில் ஜெயம் ரவி நடிப்பில் வெளியான தாம் தூம் என்கிற படத்தில் கதாநாயகியாக நடித்து தமிழ் ரசிகர்களுக்கு ஏற்கனவே அறிமுகமானவர்தான் இவர்.

அதுமட்டுமல்ல கடந்த இரண்டு வருடங்களுக்கு முன்பு ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை தழுவி உருவான தலைவி என்கிற படத்தில் ஜெயலலிதாவாக நடித்து இன்னும் பிரபலமானார்.

இந்த நிலையில் மிகப்பெரிய வெற்றி பெற்ற சந்திரமுகி படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகியுள்ள சந்திரமுகி 2 படத்திலும் கதாநாயகியாக அதுவும் சந்திரமுகி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார் கங்கனா. இந்த படம் வந்து செப்டம்பர் 15ஆம் தேதி வெளியாக இருக்கிறது. ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தை பி.வாசு இயக்கி உள்ளார்.  

இந்த படத்தில் நடித்த அனுபவம் குறித்து கங்கனா கூறும்போது, “இயக்குனர் பி.வாசு என்னிடம் சந்திரமுகி எப்படி நிற்பாள், நடப்பாள் என கூறினாரோ அதை அப்படியே நான் செய்துள்ளேன். அதேபோல லாரன்ஸ் பாஸ்கர் அனைவரிடமும் அன்பாக பழகக் கூடியவர். என்னை முதல் நாள் பார்த்தபோது கங்கனா மேடம் என்றார். இரண்டாவது நாள் பார்த்தபோது கங்கனா என்றார். மூன்றாவது நாள் ஹாய் கங்கு என்று கூறும் அளவிற்கு நட்பாக மாறிவிட்டார். இந்த படத்தில் நான் மூன்று பாடலுக்கு நடனமாடி உள்ளேன். அதுவும் வித்தியாசமான அனுபவமாக இருந்தது” என்று கூறியுள்ளார்.

Most Popular

Recent Comments