அழகி, சொல்ல மறந்த கதை, பள்ளிக்கூடம் என உணர்வு பூர்வமான படங்களை கொடுத்தவர் இயக்குனர் தங்கர் பச்சான். ஒரு பக்கம் மாறிவரும் டெக்னாலஜிக்கு ஏற்ப படைப்பாளிகள் விதவிதமாக படைப்புகளை கையாண்டாலும் எப்போதும் குடும்ப உறவுகளின் அவசியத்தை வலியுறுத்திய தொடர்ந்து படங்களை இயக்கி வருகிறார் தங்கர் பச்சான்.

அந்த வகையில் தற்போது அவரது இயக்கத்தில் உருவாகியுள்ள படம் கருமேகங்கள் கலைகின்றன. செப்-1ல் வெளியாக உள்ள இந்த படத்தின் பத்திரிகையாளர் சமீபத்தில் சந்திப்பு நடைபெற்றது. இந்த படத்தில் தொகுப்பாளராக பணியாற்றியுள்ள எடிட்டர் லெனின் பேசும்போது ஒரு சுவாரசியமான விஷயத்தை குறிப்பிட்டார்.

இந்த நிகழ்வில் அவர் பேசும்போது “இந்த படத்தில் எல்லோருமே கிழவர்களாக இருக்கிறார்கள்.. என்னுடைய படத்தொகுப்பை அப்போது யாரும் ஒத்துக்கொள்ளவில்லை. ஆனால் இப்போது என்னை தேடி வருகிறார்கள். இந்த படத்தின் படத்தொகுப்பை முடித்து டப்பிங்கிற்கு அனுப்பும்போது கிட்டத்தட்ட ஐந்தே கால் மணி நேரம் படம் இருந்தது. பேசாமல் இரண்டு பாகங்களாக வெளியிடலாம் அல்லது இரண்டு இடைவேளைகள் விட்டு படத்தை வெளியிடலாம் என்று கூட கூறினேன்.

அடுத்ததாக பாரதிராஜா இயக்கவுள்ள படத்திற்கு நான் தான் படத்தொகுப்பு செய்வேன். இன்றைய இளைஞர்கள் இப்படி படம் எடுக்கிறார்களே, நாம் இதைவிட அதிகமாக ஒரு படம் எடுக்க வேண்டும் என்கிற ஆத்திரம் பாரதிராஜாவுக்கு இன்னும் இருக்கிறது. இந்த படத்தில் நடித்த பாரதிராஜாவுக்கு கிடைக்கிறதோ இல்லையோ குழந்தை நட்சத்திரம் சாரலுக்கு பேசியவர்கள் நிச்சயம் தேசிய விருது கிடைக்கும்.

அருவி படத்திற்கு எடிட்டிங்கில் நான் தான் உதவி செய்தேன். அதில் பார்த்ததற்கும் இந்த படத்தில் பார்ப்பதற்கும் அதிதி பாலன் வித்தியாசமாக தெரிகிறார். பாரதிராஜா உடல்நிலை சரியில்லாத நிலையிலும் கூட வெகு சிரத்தை எடுத்து டப்பிங் பேசியுள்ளார்” என்று கூறினார்