Home News Kollywood தென்னிந்திய மாநிலங்கள் அனைத்திலும் 50 கோடியை கடந்த ஜெயிலர்

தென்னிந்திய மாநிலங்கள் அனைத்திலும் 50 கோடியை கடந்த ஜெயிலர்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் கடந்த ஆகஸ்ட் 10ஆம் தேதி ஜெயிலர் திரைப்படம் வெளியானது. இதற்கு முன்னதாக சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த தர்பார் மற்றும் அண்ணாத்த ஆகிய திரைப்படங்கள் மிகப்பெரிய அளவில் வரவேற்பை பெறாத நிலையில் ஜெயிலர் படம் வெளியான முதல் நாளில் இருந்தே திரையிட்ட அனைத்து திரையரங்குகளிலும் ஹவுஸ் ஃபுல்லாக ஓட துவங்கியது.

குறிப்பாக தமிழகத்தையும் தாண்டி மற்ற தென்னிந்திய மாநிலங்களிலும் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு வரவேற்புடன் இந்த படம் ஓடிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய பகுதிகளில் கிட்டத்தட்ட 50 கோடிக்கு மேல் வசூலித்து மற்ற மாநிலங்களில் மிக அதிக அளவில் வசூலித்த தமிழ் படங்களின் பட்டியலில் முதல் சில ஜெயிலர் திரைப்படமும் இடம் பிடித்துள்ளது.

இனிவரும் நாட்களிலும் இதே ஓட்டம் தொடர்ந்தால் மற்ற மொழிகளில் வெளியாகும் டப்பிங் படங்களின் வரிசையில் ஜெயிலர் படத்தின் வசூல் இன்னும் புதிய சாதனைகளை படைக்கும் என்றே தெரிகிறது.