HomeNewsKollywoodதனியார் கல்லூரியில் பிரம்மாண்டமாக நடைபெறும் சந்திரமுகி 2 இசை வெளியீட்டு விழா

தனியார் கல்லூரியில் பிரம்மாண்டமாக நடைபெறும் சந்திரமுகி 2 இசை வெளியீட்டு விழா

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 18 வருடங்களுக்கு முன்பு வெளியாகி பிளாக் பஸ்டர் வெற்றி பெற்ற படம் சந்திரமுகி. இந்த படத்தை பி வாசு இயக்கி இருந்தார். ஜோதிகா, நயன்தாரா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்திருந்தனர்,

இந்த நிலையில் தற்போது இந்த படத்தின் இரண்டாம் பாகமாக சந்திரமுகி 2 உருவாகியுள்ளது. இயக்குனர் பி வாசுவே இயக்கியுள்ள இந்த படத்தில் ராகவா லாரன்ஸ் கதாநாயகனாக நடிக்க, பாலிவுட் நடிகை கங்கணா ரணவத் கதாநாயகியாக நடித்துள்ளார்.

இந்த படத்திற்கு ஆஸ்கர் விருது புகழ் மரகதமணி இசையமைத்துள்ளார். இந்த நிலையில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழாவை வரும் ஆகஸ்ட் 25ஆம் தேதி மாலை ஜேப்பியார் கல்லூரியில் பிரமாண்டமாக நடத்த இருக்கின்றனர்.

- Advertisment -
V4UMEDIA

Most Popular

Recent Comments