HomeNewsKollywoodதிருச்சிற்றம்பலம் முதல் வருட கொண்டாட்டத்தில் தனுஷ்

திருச்சிற்றம்பலம் முதல் வருட கொண்டாட்டத்தில் தனுஷ்

தனுஷ் நடிப்பில் கடந்த வருடம் திருச்சிற்றம்பலம் திரைப்படம் வெளியானது. மித்ரன் ஜவகர் இயக்கியிருந்த இந்த படத்தில் நித்யா மேனன், பிரியா பவானி சங்கர், ராசி கண்ணா ஆகியோர் கதாநாயகிகளாக நடித்திருந்தனர். பிரகாஷ்ராஜ், பாரதிராஜா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர்.

இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்திருந்தார் இந்த படம் வெளியாகி மிகப்பெரிய அளவில் வெற்றியைப் பெற்றது. குறிப்பாக தனுஷின் அசுரன், கர்ணன் ஆகிய படங்களுக்கு எப்படி ரசிகர்கள் தியேட்டர்களுக்கு படை எடுத்தார்களோ அதேபோல மீண்டும் ஒரு திருவிழாவை நடத்திக் காட்டி இருந்தார் தனுஷ்.

ஏற்கனவே தனுஷை வைத்து யாரடி நீ மோகினி, குட்டி, உத்தமபுத்திரன் ஆகிய படங்களின் மூலம் ஹாட்ரிக் வெற்றிகளை வெற்றிகளை தந்த மித்ரன் ஜவஹர், திருச்சிற்றம்பலம் படத்தின் மூலம் மீண்டும் ஒரு வெற்றியை பதிவு செய்தார்.

இந்த படத்தில் தனுஷ், நித்யா மேனன் இவர்களின் நட்பு மற்றும் நடிப்பு, ராசி கண்ணா, பிரியா பவானி சங்கர் ஆகியோரின் கச்சிதமான கதாபாத்திர வடிவமைப்பு, தாத்தா பாரதிராஜாவின் அன்பு, தந்தை பிரகாஷ்ராஜின் நேசம் கண்டிப்பு என எல்லாம் கலந்து இந்தப்படம் குடும்பத்துடன் பார்க்க வேண்டிய ஒரு படமாக அமைந்தது தான் இவ்வளவு பெரிய வெற்றிக்கு காரணம் என தியேட்டர் காரர்கள் பாராட்டு தெரிவித்தனர்

இந்த நிலையில் இந்த படம் வெளியாகி ஒரு வருடத்தை நிறைவு செய்துள்ளது.  இதை தனுஷ், நித்யா மேனன், பிரகாஷ்ராஜ் உள்ளிட்ட படக்குழுவினர் உற்சாகமாக கொண்டாடி மகிழ்ந்துள்ளனர்.

- Advertisment -
V4UMEDIA

Most Popular

Recent Comments