V4UMEDIA
HomeNewsKollywoodசிலை கடத்தல் குற்றங்களின் பின்னணியில் உருவாகியுள்ள ‘பரம்பொருள்’

சிலை கடத்தல் குற்றங்களின் பின்னணியில் உருவாகியுள்ள ‘பரம்பொருள்’

நடிகர் சரத்குமார் சமீப காலமாக பல முன்னணி நடிகரின் படங்களில் முக்கிய கதாபாத்திரங்களிலும் சில படங்களில் கதையின் நாயகனாகவும் மாறி மாறி நடித்து வருகிறார். அந்த வகையில் அவர் கதையின் நாயகனாக நடித்துள்ள படம் பரம்பொருள்,

இயக்குநர் ராமிடம் உதவி இயக்குநராக பணியாற்றியுள்ள சி. அரவிந்த் ராஜ் இந்த படத்தை இயக்கியுள்ளார் சரத்குமாருடன் இளம் நடிகர் அமிதாஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். கதாநாயகியாக காஷ்மீரா பர்தேசி நடிக்க, முக்கிய கதாப்பாத்திரங்களில் திரைப்பட இயக்குநர் பாலாஜி சக்திவேல், சார்லஸ் வினோத், டி. சிவா, வின்சென்ட் அசோகன், கஜராஜ், பாலகிருஷ்ணன், பவா செல்லதுரை மற்றும் பலர் நடித்துள்ளன்னர்.

யுவன் ஷங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்க, ‘ரிச்சி’ படத்தின் மூலம் பாராட்டுகளை பெற்ற ஒளிப்பதிவாளர் பாண்டி குமார் ஒளிப்பதிவை மேற்கொள்ள, ‘டான்’, ‘சாணிக் காயிதம்’, ‘ராக்கி’, ‘எட்டு தோட்டாக்கள்’ படங்கள் மூலம் கவனத்தை ஈர்த்துள்ள நாகூரான் படத்தொகுப்பை கையாண்டுள்ளார்.  

வரும் செப்டம்பர் 1ஆம் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறது. சமீபத்தில் நடைபெற்ற இந்த படத்தின் டிரைலர் வெளியீட்டு விழாவில் கலந்து கொண்ட இயக்குநர் மணிரத்னம் மற்றும் நடிகையும் இயக்குநருமான‌ சுஹாசினி மணிரத்னம் இந்த படத்தின் டிரைலரை வெளியிட்டனர். சக்தி பிலிம் பேக்டரி சார்பில் சக்திவேலன் இப்படத்தை வெளியிடுகிறார்.

Most Popular

Recent Comments