சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் கடந்த சில தினங்களுக்கு முன்பு வெளியான ஜெயிலர் திரைப்படம் நாளுக்கு நாள் ஹவுஸ்புல் காட்சிகளாக வெற்றி நடை போட்டு வருகிறது. ரசிகர்கள், திரையுலக பிரபலங்கள் என எல்லோரும் இங்கே ஜெயிலர் பட கொண்டாட்டத்தை திருவிழா போல கொண்டாடிக் கொண்டிருக்கின்றனர்.
ஆனால் சூப்பர் ஸ்டார் ரஜினியோ வழக்கம் போல தற்போது இமயமலை ஆன்மீக சுற்றுப்பயணத்தில் இருக்கிறார். அந்தவகையில் தற்போது உத்தரகாண்டில் உள்ள துவாரஹாத் என்கிற இடத்தில் அமைந்துள்ள சுவாமி தயானந்த சரஸ்வதி ஆசிரமத்திற்கு வருகை தந்துள்ளார் ரஜினிகாந்த்.
நாடு முழுவதும் 77 வது சுதந்திர தினம் விமர்சையாக கொண்டாடவிருக்கும் நிலையில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் சுவாமி தயானந்த சரஸ்வதி ஆசிரமத்திலேயே சுதந்திர தினத்தை கொண்டாடி மகிழ்ந்துள்ளார்.