V4UMEDIA
HomeNewsKollywoodலியோ திரைப்படத்தை மலேசியாவில் வெளியிடும் மாலிக் ஸ்ட்ரீம் கார்பரேஷன்  

லியோ திரைப்படத்தை மலேசியாவில் வெளியிடும் மாலிக் ஸ்ட்ரீம் கார்பரேஷன்  

மாஸ்டர் படத்தை தொடர்ந்து லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் மீண்டும் விஜய் நடித்து வரும் படம் லியோ. இந்த படத்தை செவன் ஸ்கிரீன் மீடியா தயாரித்து வருகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிவடைந்துவிட்ட நிலையில் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன.

வரும் அக்டோபர் 19ஆம் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறது என ஏற்கனவே அறிவிக்கப்பட்டு விட்டது. இந்த படத்தின் கேரள, கர்நாடக, ஆந்திர திரை உலக வெளியீட்டு உரிமைகள் ஒவ்வொன்றாக சமீப நாட்களில் விநியோகம் செய்யப்பட்டன.

இந்த நிலையில் இந்த படத்தை மலேசியாவில் வெளியிடும் உரிமையை பிரபலமான மாலிக் ஸ்ட்ரீம் கார்பரேஷன் கைப்பற்றியுள்ளது. மலேசியாவில் கபாலி படத்தை தொடர்ந்து முன்னணி நடிகர்களின் படங்களாக கைப்பற்றி வரும் இந்த நிறுவனம் அங்கே படங்களை மிகப்பெரிய அளவில் வெளியிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

லியோ படத்தில் நீண்ட இடைவெளிக்கு பிறகு விஜய்யுடன் இணைந்து நடித்துள்ளார் நடிகை திரிஷா. மற்றும் இயக்குனர்கள் கவுதம் மேனன், மிஷ்கின், பாலிவுட் நடிகர் சஞ்சய் தத் என பல முன்னணி நட்சத்திரங்கள் இந்த படத்தில் நடித்துள்ளனர்.

அனிருத் இந்த படத்திற்கு இசையமைத்து வருகிறார். ஏற்கனவே அவரது இசையில் வெளியான நான் ரெடி தான் பாடல் மிகப்பெரிய அளவில் ஹிட்டானது குறிப்பிடத்தக்கது.

Most Popular

Recent Comments