HomeNewsKollywoodபள்ளி நண்பர்களுடன் சந்திப்பு நடத்திய தனுஷ்

பள்ளி நண்பர்களுடன் சந்திப்பு நடத்திய தனுஷ்

தமிழ் சினிமாவில் எண்பதுகளின் காலகட்டத்தில் நடித்த நட்சத்திரங்கள் வருடத்திற்கு ஒரு முறை ஒன்று கூடி உற்சாகமாக கொண்டாடுவதை வழக்கமாக வைத்திருப்பதை தான் நாம் பார்த்திருக்கிறோம். அந்த வகையில் ஒரு புதிய விஷயமாக நடிகர் தனுஷ் தன்னுடன் பள்ளி காலத்தில் படித்த நண்பர்களை அழைத்து நட்சத்திர ஹோட்டலில் விருந்தளித்து அவர்களுடன் தனது நேரத்தை செலவிட்டு மகிழ்ந்துள்ளார்.

இது குறித்த புகைப்படம் ஒன்று தற்போது சோஷியல் மீடியாவில் வெளியாகி உள்ளது. துள்ளுவதோ இளமை படத்தில் கதாநாயகனாக நடித்ததன் மூலம் தமிழ் திரை உலகில் அறிமுகமான நடிகர் தனுஷ், அந்த சமயத்தில் பள்ளி படிப்பை கூட முடித்திருக்கவில்லை.

அதன் பிறகு நடிப்பில் பிசியான அவர் படிப்பை ஒதுக்கி வைத்துவிட்டு சினிமாவிலேயே தீவிர கவனம் செலுத்தி இன்று இந்திய சினிமாவில் ஒரு முக்கியமான நட்சத்திரமாக மாறிவிட்டார்.

இந்த நிலையில் தான் தன்னுடன் பள்ளி காலத்தில் இணைந்து படித்த மாணவர்களை அழைத்து சந்தித்து மகிழ்ந்துள்ளார் தனுஷ்.

- Advertisment -
V4UMEDIA

Most Popular

Recent Comments