V4UMEDIA
HomeNewsKollywoodதங்கர் பச்சான் பட டிரைலரை வெளியிட்ட நீதியரசர் சந்துரு

தங்கர் பச்சான் பட டிரைலரை வெளியிட்ட நீதியரசர் சந்துரு

மக்களின் மனதுக்கு நெருக்கமான படங்களை மட்டுமே இயக்கி வருபவர் இயக்குனர் தங்கர் பச்சான். அழகி, ஒன்பது ரூபாய் நோட்டு, பள்ளிக்கூடம் என எளிய மனிதர்களின் வாழ்வியல் கதைகளை படமாக்கி வரும் அவர் தற்போது கருமேகங்கள் கலைகின்றன என்கிற படத்தை இயக்கியுள்ளார்.

இப்படத்தில் இயக்குநர் இமயம் பாரதிராஜா. இயக்குநர் கவுதம் வாசுதேவ் மேனன், நடிகர் யோகிபாபு, அதிதி பாலன் நால்வரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார்கள். ஜி.வி.பிரகாஷ் இப்படத்திற்கு இசையமைக்கிறார்.

இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சமீபத்தில் நடைபெற்ற நிலையில் தற்போது இந்த படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது. இதனை ஓய்வு பெற்ற முன்னாள் நீதி உயர் நீதிமன்ற நீதிபதி சந்துரு வெளியிட்டார்.

 ஒய்வு பெற்ற பின்பும் தமிழக அரசு அமைத்த ஆணையங்களில் ஒரு ரூபாய் கூட ஊதியம் பெறாமல் தனது சொந்த செலவிலேயே பணியாற்றி வருகிறார். சமீபத்தில் மதுரையில் திறக்கப்பட்ட கலைஞர் நூலகத்திற்கு 5000க்கும் மேற்பட்ட புத்தகங்களை அருங்கொடையாக வழங்கியவர் நீதியரசர் சந்துரு.

கருமேகங்கள் கலைகின்றன படத்தில் பாரதிராஜா ஏற்று நடித்திருக்கும் கதாபாத்திரமும் அவரைப்போன்ற ஒரு நேர்மையான நீதிபதி பாத்திரம் தான். அதனால் இந்தப்படத்தின் டிரைலரை நீதியரசர் சந்துருவை கொண்டு வெளியிட்டால் வெகு பொருத்தமாக இருக்கும் என இயக்குநர் தங்கர் பச்சான் உள்ளிட்ட படக்குழுவினர் அனைவரும் விரும்பினர். அதனை ஏற்றுக்கொண்டு இந்தப்படத்தின் டிரைலரை வெளியிட்டுள்ளார் நீதியரசர் சந்துரு.

Most Popular

Recent Comments