V4UMEDIA
HomeNewsKollywoodபத்ரிநாத் கோவிலில் தரிசனம் செய்த சூப்பர் ஸ்டார்

பத்ரிநாத் கோவிலில் தரிசனம் செய்த சூப்பர் ஸ்டார்

சூப்பர் ஸ்டார் ரஜினி எப்போதுமே இரண்டு விஷயங்களை தனது வாழ்க்கையின் முக்கிய அம்சமாக கடைபிடித்து வருகிறார். ஒன்று தன் உயிர்மூச்சான சினிமா. இன்னொன்று ஆன்மீக சுற்றுப்பயணங்கள். அந்த வகையில் சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினி நடிப்பில் நெல்சன் திலீப் குமார் இயக்கத்தில் வெளியான ஜெயிலர் திரைப்படம் மிகப்பெரிய வெற்றி பெற்று வசூலை வாரி குவித்து வருகிறது.

தமிழ்நாட்டில் மட்டுமல்லாது தென்னிந்தியாவில், வெளிநாட்டில் என திரையிட்ட இடங்களில் எல்லாம் ஹவுஸ் ஃபுல் காட்சிகளாக ஓடிக்கொண்டிருக்கிறது ஜெயிலர். இந்த வெற்றியை இங்கே ரசிகர்களும் பொதுமக்களும் திரையுலக பிரபலங்களும் கொண்டாடிக் கொண்டிருக்க இது எதிலுமே தனக்கு சம்பந்தம் இல்லாதது போல சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் தற்போது இமயமலை நோக்கி சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.

இந்த நிலையில் அவர் சில வழிபாட்டுத் தலங்களில் வழிபட்டதும் சில ஆன்மீக பிரச்சார கூட்டங்களில் பங்கேற்றதுமான வீடியோக்கள் வெளியாகி வருகின்றன. இந்த நிலையில் புகழ்பெற்ற பத்ரிநாத் கோவிலில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் வழிபட்டுள்ளார். இது குறித்த புகைப்படங்கள் தற்போது சோசியல் மீடியாவில் வெளியாகி உள்ளன.

Most Popular

Recent Comments