தமிழ் சினிமாவில் தற்போது இருக்கும் சீனியர் நடிகர் யார் என்றால் அது நடிகர் கமல் தான். 1960ல் வெளியான களத்தூர் கண்ணம்மா திரைப்படம் மூலம் திரை உலகில் ஒரு சுட்டி பையனாக அறிமுகமான கமல், எம்ஜிஆர்-சிவாஜி ஆகியோர் இரு பெரும் துருவங்களாக போட்டி போட்டு நடித்து வந்த காலகட்டத்திலேயே அவர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.
அதன் பிறகு கதாநாயகனாக மாறி அதிலும் கிட்டத்தட்ட 50 வருட திரையுலக பயணத்தை வெற்றிகரமாக தொடர்ந்து வருகிறார். இப்படி தமிழ் சினிமாவில் சீனியர் நடிகரான கமல்ஹாசனை தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்கள் இருவரில் ஒருவராக இருப்பது மிகவும் ஆச்சரியமான ஒன்.
இவரது 64 வருட திரையுலக பயணத்தை ரசிகர்கள் பலரும் வியந்து பாராட்டி தங்களது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து கமல் வெளியிட்டுள்ள பதிவில், “64 ஆண்டுகள் ஒருவன் வாழ்க, என்று வாழ்த்தினாலே அது பெரிய ஆசிதான். அது என் உடலுக்கான வாழ்த்தாக இல்லாமல் என் கலை வாழ்வுக்கான ஆசியாக இருப்பது என்னைவிட திறமையாளர்கள் பலருக்கும் கிட்டா வரம். வாழ்த்தும் அனைவருக்கும் என் சிரம் தாழ்த்தி பணிவுடன் நன்றி. எஞ்சி உள நாட்கள் என் மக்களுக்காக” என்று உருக்கமாக கூறியுள்ளார்.