விஜய் தேவரகொண்டா, சமந்தா இருவரும் மகாநடி என்கிற படத்திற்கு பிறகு மீண்டும் இணைந்து நடித்துள்ள படம் குஷி. தமிழில் விஜய் நடிப்பில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற குஷி படத்தின் டைட்டிலை வைத்திருந்தாலும் அதைப்போலவே இதுவும் ஒரு மாறுபட்ட கதை களத்தில் உருவாகியுள்ளது. தெலுங்கு இயக்குனர் சிவா நிர்வானா என்பவர் இந்த படத்தை இயக்கியுள்ளார்.
வரும் செப்டம்பர் 1ஆம் தேதி இந்த படம் வெளியாக இருக்கும் நிலையில் இதன் ட்ரைலர் வெளியீட்டு விழா நேற்று ஹைதராபாத்தில் நடைபெற்றது.
தமிழில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம், கன்னடம் இந்தி ஆகிய மொழிகளிலும் இப்படத்தின் முன்னோட்டம் வெளியிடப்பட்டிருக்கிறது
மேலும் இந்த படத்தில் ஜெயராம், சச்சின் கடேக்கர், முரளி சர்மா, லட்சுமி, ஆலி, சரண்யா பொன்வண்ணன், ரோகிணி, ‘வெண்ணிலா’ கிஷோர், ராகுல் ராமகிருஷ்ணா, ஸ்ரீகாந்த் ஐயங்கார், சரண்யா பிரதீப் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
இதனிடையே ‘குஷி’ படத்தின் ப்ரீ -ரிலீஸ் நிகழ்ச்சி, இசைக் கொண்டாட்டமாக நடைபெறுகிறது என்பதும், இந்நிகழ்ச்சி ஆகஸ்ட் 15 ஆம் தேதியன்று ஹைதராபாத்திலுள்ள ஹெச்ஐஐசி மைதானத்தில் நடிகர் விஜய் தேவரகொண்டா, சமந்தா, இசையப்பாளர் ஹேஷம் அப்துல் வஹாப், பிரபல முன்னணி பாடகர்கள், பாடகிகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு இசை விருந்து அளிக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.