V4UMEDIA
HomeNewsKollywoodகமல் பட இயக்குனரின் ஆக்சன் படத்தில் கதாநாயகியாக நடிக்கும் அதிதி ராவ்

கமல் பட இயக்குனரின் ஆக்சன் படத்தில் கதாநாயகியாக நடிக்கும் அதிதி ராவ்

நடிகர் கமல் இயக்கிய படங்களில் அவரிடம் உதவி இயக்குனராக பணியாற்றி, கமல் நடித்த தூங்காவனம் என்கிற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ராஜேஷ் எம் செல்வா. இதைத் தொடர்ந்து விக்ரம் நடித்த கடாரம் கொண்டான், சரத்குமார் நடித்த இரை ஆகிய படங்களை அவர் இயக்கினார்.

இந்த நிலையில் தற்போது புதிய படம் ஒன்றை இயக்குகிறார் ராஜேஷ் எம் செல்வா. இந்த படத்தை அல்லு அரவிந்தின் ஆஹா ஸ்டுடியோஸ் தயாரிக்கிறது. சென்னை மற்றும் டெல்லியில் படமாக்கப்பட இருக்கும் இந்தத் திரைப்படம் அதிரடி ஆக்‌ஷன் படமாக உருவாகிறது.

இதில் நடிகர்கள் அதிதி ராவ் ஹைதாரி, கெட்டிகா சர்மா மற்றும் அன்சன் பால் நடிக்கின்றனர் இப்படத்தின் படப்பிடிப்பு எளிமையான பூஜையுடன் துவங்கி, தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

மேலும், இப்படம் பார்வையாளர்களுக்கு ஒரு வித்தியாசமான அனுபவத்தை வழங்கும் என்று படக்குழு உறுதியளித்துள்ளனர்.

அல்லு அரவிந்தின் ஆஹா ஸ்டுடியோஸ் இந்தப் படத்தைத் தயாரிக்க, குளோபல் ஒன் ஸ்டுடியோஸ் ரமேஷுடன் இணைந்து ரூக்ஸ் தயாரிக்கிறார்

Most Popular

Recent Comments