V4UMEDIA
HomeNewsKollywoodநயன்தாரா பட இயக்குனரின் டைரக்ஷனில் ஐஸ்வர்யா ராஜேஷ் ; விரைவில் படம் ரிலீஸ்

நயன்தாரா பட இயக்குனரின் டைரக்ஷனில் ஐஸ்வர்யா ராஜேஷ் ; விரைவில் படம் ரிலீஸ்

கதைக்கும் கதாநாயகிக்கும் முக்கியத்துவம் தரும் கதாபாத்திரங்களாக தேர்ந்தெடுத்து நடித்து வருகிறார் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ். அதனால் மலையாள திரை உலகில் இருந்தும் அவருக்கு பட வாய்ப்புகள் தேடி வருகின்றன. அந்தவகையில் தற்போது புலிமடா என்கிற மலையாள படத்தில் கதாநாயகியாக நடித்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ். 

இந்த படத்தின் கதாநாயகனாக ஜோசப் புகழ் நடிகர் ஜோஜு ஜார்ஜ் நடித்துள்ளார். பிரபல கதாசிரியரும் இயக்குனருமான ஏ.கே சாஜன் இந்த படத்தை இயக்கியுள்ளார். 

இதற்கு முன்னதாக மம்முட்டி, நயன்தாரா நடிப்பில் சில வருடங்களுக்கு முன்பு வெளியான புதிய நியமம் என்கிற படத்தை இயக்கியவர் தான் ஏ.கே சாஜன்.

இந்த புலிமடா படத்தின் படப்பிடிப்பு மற்றும் போஸ்ட் புரொடக்சன் பணிகள் முடிவடைந்து தற்போது ரிலீசுக்கு தயாராகி உள்ளது. விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Most Popular

Recent Comments