HomeNewsKollywoodஇளையராஜாவும் ஏஆர் ரகுமானும் கலந்த கலவை தான் அனிருத் ; சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாராட்டு

இளையராஜாவும் ஏஆர் ரகுமானும் கலந்த கலவை தான் அனிருத் ; சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாராட்டு

இசையமைப்பாளராக தனது வெற்றி பயணத்தை தொடர்ந்து வருகிறார் அனிருத். ஒரு பக்கம் இளம் இயக்குனர்களுடன் கைகோர்த்து வெற்றி படங்களையும் பாடங்களையும் கொடுத்து வரும் அனிருத், ரஜினிகாந்த் கமல்ஹாசன் உள்ளிட்ட சீனியர் நடிகர்களின் படங்களுக்கும் அதேபோல சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்து வருகிறார். தற்போதைய நிலையில் தமிழ் மட்டுமல்ல, தெலுங்கிலும் உள்ள முன்னணி நடிகர்களின் படங்களுக்கு அனிருத் அதிக அளவில் இசையமைத்து வருகிறார்.

அந்த வகையில் ஜெயிலர், இந்தியன் 2, லியோ என அவரது படங்கள் வரிசை கட்டி வெளியாக இருக்கின்றன. இதில் வரும் ஆகஸ்ட் 10ஆம் தேதி ஜெயிலர் திரைப்படம் வெளியாகிறது. இந்த படத்தில் இவர் இசையமைப்பில் முதல் பாடலாக வெளியான காவாலா என்கிற பாடல் பட்டி தொட்டி எல்லாம் பட்டையை கிளப்பி வருகிறது.

அதன் பிறகு வெளியான அலப்பறை பாடலும் ரஜினி ரசிகர்களின் தேசிய கீதமாகவே மாறிவிட்டது. இந்த நிலையில் சமீபத்தில் இந்த படத்தின் இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பேசும்போது அனிருத்தை மெதுவாக பாராட்டினார்.

குறிப்பாக இளையராஜாவும் ஏ.ஆர் ரகுமானும் கலந்த ஒரு கலவை தான் அனிருத் என்றும், அவருக்குள் இருக்கும் இசைஞானம் தன்னை பிரமிக்க வைக்கிறது என்றும் வரும் நாட்களில் அவர் தொடப்போகும் உயரம் இன்னும் அதிகம் என்றும் கூறி தனது ஆசீர்வாதங்களையும் வழங்கினார் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த்.

- Advertisment -
V4UMEDIA

Most Popular

Recent Comments