V4UMEDIA
HomeNewsKollywoodசெம்மரக் கடத்தல் பின்னணியில் உருவாகும் நடிகர் வெற்றியின் படம்

செம்மரக் கடத்தல் பின்னணியில் உருவாகும் நடிகர் வெற்றியின் படம்

தமிழ் சினிமாவில் வருடத்திற்கு எத்தனையோ நடிகர்கள் கதாநாயகர்களாக அறிமுகமாகின்றனர். ஆனால் அவர்களில் நிலைத்து நின்று அடுத்தடுத்த படங்களில் நடித்து ரசிகர்களிடம் ஓரளவு வரவேற்பு பெறுபவர்கள் வெகு சிலரே. அதற்கு காரணம் அவர்கள் தேர்ந்தெடுக்கும் கதையும் கதாபாத்திரங்களும் தான்.

அப்படி எட்டு தோட்டாக்கள் என்கிற படம் மூலம் கதாநாயகனாக அறிமுகமானவர் நடிகர் வெற்றி. அதை தொடர்ந்து ஜீவி என்கிற வித்தியாசமான கதைக்களம் கொண்ட படத்தில் நடித்து ரசிகர்களிடம் என்னும் அதிகமாக அறிமுகமாகி, தொடர்ந்து சீரான இடைவெளியில் படங்களில் நடித்து வருகிறார் வெற்றி.

சமீபத்தில் கூட அவர் நடித்த பம்பர் என்கிற திரைப்படம் வெளியானது. படம் ரசிகர்களிடம் மட்டுமல்லாது விமர்சகர்களிடமும் நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் தற்போது ரெட் சாண்டல் என்கிற படத்தில் நடித்துள்ளார் நடிகர் வெற்றி.

படத்தின் டைட்டிலை பார்க்கும்போதே செம்மர கடத்தல் பின்னணியில் இந்த படம் உருவாகி இருப்பதை புரிந்து கொள்ள முடிகிறது. இந்த படத்தை குரு ராமானுஜம் என்பவர் இயக்கியுள்ளார்.

இதில் கே ஜி எஃப் கருடா ராம், தியா மயூரிகா, கணேஷ் வெங்கட்ராம், கபாலி விஸ்வந்த் ஆகியோர் நடித்துள்ளனர், உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து இந்த படம் உருவாகி உள்ளது, இசையமைப்பாளர் சாம் சி எஸ் இந்த படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்த மாதத்திற்குள்ளேயே இந்த படம் வெளியாகும் என ஒரு தகவல் தற்போது அறிவிக்கப்பட்டுள்ளது.

Most Popular

Recent Comments