V4UMEDIA
HomeNewsKollywoodஇனி பேச்சு இல்லை.. வீச்சு தான் ; அதிர வைத்த ஜெயிலர் ஷோகேஸ்

இனி பேச்சு இல்லை.. வீச்சு தான் ; அதிர வைத்த ஜெயிலர் ஷோகேஸ்

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஜெயிலர். அனிருத் இசையமைக்கும் இந்த படத்தில் தமன்னா, ரம்யா கிருஷ்ணன், வசந்த் ரவி, யோகி பாபு, விடிவி கணேஷ், மிர்னா உள்ளிட்ட பல நடித்துள்ளனர்.

மேலும் மோகன்லால், சிவராஜ் குமார், ஜாக்கி ஷெராப், சுனில், விநாயகன் என மற்ற மொழி திரை உலகை சேர்ந்த பிரபல நட்சத்திரங்களும் இந்த படத்தில் நடித்துள்ளனர். ஆகஸ்ட் பத்தாம் தேதி இந்த படம் வெளியாக இருக்கிறது.

இதைத் தொடர்ந்து கடந்த சில நாட்களாகவே இந்த படத்தின் ஒவ்வொரு பாடலாக வெளியாகி ரசிகர்களை உற்சாகப்படுத்தி வந்தது. கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த படத்தில் இசை வெளியீட்டு விழாவும் பிரம்மாண்டமாக நடந்தது.

இந்த நிலையில் ரசிகர்கள் அனைவருமே ஆவலுடன் எதிர்பார்த்த இந்த படத்தின் ஷோகேஸ், அதாவது டிரைலர் வெளியானது. இந்த படத்தின் டிரைலரில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் கதாபாத்திர வடிவமைப்பும் அவர் பேசும் வசனங்களும் இது நிச்சயமாக பாட்ஷா திரைப்படம் போல ரசிகர்களுக்கு இன்னொரு மிகப்பெரிய விருந்தாக அமையும் என்று தெரிகிறது.

குறிப்பாக ஓரளவுக்கு மேல நம்ம கிட்ட பேச்சு கிடையாது வீச்சு மட்டும்தான் என்கிற வசனங்கள் இனி சோசியல் மீடியாவை அதிகம் ஆக்கிரமிக்கும் என்பதில் சந்தேகம் இல்லை. இந்த ஷோகேஸை பார்க்கும்போது ஜெயிலர் படத்தை பார்ப்பதற்காக நீண்ட நாட்கள் காத்திருக்க முடியாது என்றே ரசிகர்கள் பலரும் தங்கள் ஆர்வத்தை வெளிப்படுத்தி வருகின்றனர்.

Most Popular

Recent Comments