V4UMEDIA
HomeNewsKollywoodதனுஷ் பிறந்த நாளில் கேப்டன் மில்லர் டீசர் ரிலீஸ்

தனுஷ் பிறந்த நாளில் கேப்டன் மில்லர் டீசர் ரிலீஸ்

இந்த வருடத்தின் துவக்கத்தில் வாத்தி என்கிற படத்தை கொடுத்த தனுஷ் அடுத்ததாக இந்த வருடம் அனேகமாக தீபாவளி தினத்திற்கு கேப்டன் மில்லர் என்கிற படத்தை கொடுக்க இருக்கிறார். அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் உருவாகி வரும் இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து விட்ட நிலையில் இதன் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் துவங்கியுள்ளன.

அதுமட்டுமல்ல வரும் ஜூலை 28ஆம் தேதி தனுஷின் பிறந்தநாள் என்பதால் அன்றைய தினம் இந்த படத்தின் டீசர் அல்லது ப்ரோமோ ஏதோ ஒன்று வெளியாகும் என ரசிகர்கள் ஆவலுடன் எதிர்பார்த்து வந்தனர். இந்த நிலையில் அவர்கள் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாக வரும் ஜூலை 28ஆம் தேதி இந்த படத்தின் டீசர் வெளியாக இருக்கிறது.

இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் குமார் இசையமைத்துள்ளார். பிரியங்கா மோகன் கதாநாயகியாக நடிக்க, முக்கிய வேடத்தில் கன்னட நடிகர் சிவராஜ் குமார் நடித்துள்ளார். அது மட்டுமல்ல சார்பட்டா பரம்பரை புகழ் வேம்புலி ஜான் கொக்கேன் இந்த படத்தில் முக்கிய வேடத்தில் நடித்துள்ளார்.

வரும் ஜூலை 28ஆம் தேதி தனுஷ் ரசிகர்களின் கொண்டாட்டமாக கேப்டன் மில்லர் அமையப்போகிறது. நீங்கள் எதிர்பாராத பல விஷயங்கள் இந்த படத்தில் இருக்கின்றது என்று கூறியுள்ளார்.

Most Popular

Recent Comments