V4UMEDIA
HomeNewsKollywoodடெலிவரி பாய்ஸ்க்கு சிறப்பு காட்சியாக திரையிடப்பட்ட அநீதி

டெலிவரி பாய்ஸ்க்கு சிறப்பு காட்சியாக திரையிடப்பட்ட அநீதி

கடந்த வெள்ளியன்று வசந்தபாலன் இயக்கத்தில் அர்ஜுன் தாஸ், துசாரா விஜயன் இணைந்து நடித்த அநீதி என்கிற திரைப்படம் வெளியானது, ஜி.வி பிரகாஷ் இசையமைத்திருந்த இந்த படத்தில் வனிதா விஜயகுமார், அர்ஜுன் சிதம்பரம், காளி வெங்கட், நாடோடிகள் பரணி உள்ளிட்ட முக்கிய நட்சத்திரங்கள் பல நடித்திருந்தனர்.

இந்த படத்தின் மூலம் வில்லன் நடிகரான அர்ஜுன் தாஸ் முதல் முறையாக கதாநாயகனாக மாறியிருந்தார். இந்தப் படத்தில் அவர் உணவு டெலிவரி செய்யும் டெலிவரி பாய் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

இதற்கு முன்னதாக அங்காடி தெரு என்கிற படத்தில் பிரபலமான துணிக்கடைகளில் வேலை செய்யும் விற்பனை பெண்களும் ஆண்களும் எவ்வளவு சிரமங்களை அனுபவிக்கின்றனர் என்று அப்பட்டமாக வெளிச்சம் போட்டு காட்டினார் இயக்குனர் வசந்த பாலன்.

இந்த படத்தில் உணவு டெலிவரி செய்யும் நிறுவனத்தில் வேலை பார்க்கும் இளைஞர்கள் எந்தவிதமான கஷ்டங்களை எல்லாம் அனுபவிக்கின்றனர், எவ்வாறு எல்லாம் உணவு டெலிவரி செய்ய செல்லும் இடத்தில் அவமானப்படுகின்றனர் என்பது குறித்து விரிவாக அலசி இருக்கிறார்

இந்த படம் வெளியாகி ஓரளவு வரவேற்புடன் ஓடிக்கொண்டிருக்கிறது. இந்த நிலையில் சென்னையில் உள்ள உணவு டெலிவரி நிறுவனங்களில் பணியாற்றும் பலரையும் அழைத்து அநீதி படத்தின் சிறப்புக் காட்சியை திரையிட்டு காட்டி உள்ளார் இயக்குனர் வசந்தபாலன்.

இந்த நிகழ்வின்போது இயக்குனர், நாயகன், நாயகியுடன் வனிதா விஜயகுமார், காளி வெங்கட் ஆகியோரும் கலந்துகொண்டனர். இந்த படத்தை இயக்குனர் வசந்தபாலன் எதற்காக எடுத்தாரோ, யாரை மையப்படுத்தி எடுத்தாரோ அவர்களையே அழைத்து வந்து இந்த படத்தை இலவச கட்சியாக திரையிட்டதன் மூலம் அவர்களுக்கு இன்னும் பெருமை சேர்த்துள்ளார் வசந்த பாலன்.

Most Popular

Recent Comments