V4UMEDIA
HomeNewsKollywoodசிவகார்த்திகேயனைப் போல விமலுக்கும் கை கொடுக்குமா ரஜினி பட டைட்டில்  ?

சிவகார்த்திகேயனைப் போல விமலுக்கும் கை கொடுக்குமா ரஜினி பட டைட்டில்  ?

சூப்பர் ஸ்டார் ரஜினி நடித்த படங்களின் டைட்டில்களை மீண்டும் தங்களது படங்களுக்கு சூட்டி அதில் தாங்களும் நடிக்க வேண்டும் என்பது இப்போது இருக்கும் ஒவ்வொரு இளம் ஹீரோக்களின் ஆசையும் கூட.

அந்த வகையில் சமீபத்தில் சிவகார்த்திகேயனின் நடிப்பில் வெளியாகி வெற்றி பெற்றுள்ள மாவீரன் திரைப்படமும் 35 வருடங்களுக்கு முன்பு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்த படத்தின் டைட்டில் தான்.

இந்த நிலையில் அடுத்ததாக நடிகர் விமல் நடித்துள்ள துடிக்கும் கரங்கள் என்கிற படம் வரும் ஆகஸ்ட் மாதத்தில் வெளியாக இருக்கிறது. இந்த படமும் சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் எஸ்.பி பாலசுப்ரமணியம் இசையமைப்பில் வெளியான சூப்பர் ஹிட் படம் தான்.

சிவகார்த்திகேயனுக்கு மாவீரன் டைட்டில் கை கொடுத்தது போல விமலுக்கு இந்த துடிக்கும் கரங்கள் டைட்டில் வெற்றிக்கரம் நீட்டுமா என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

காத்திருப்போர் பட்டியல் என்கிற படத்தை இயக்கிய வேலுதாஸ் என்பவர் தான் இந்த படத்தை இயக்கியுள்ளார். இந்த படத்தில் கதாநாயகியாக மிஷா நரங் நடிக்க, சதீஷ், சௌந்தரராஜன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். பரதன் பிலிம்ஸ் இந்த படத்தை தயாரித்துள்ளனர். ஆக்சன் கலந்த திரில்லர் கதைக்களத்தில் இந்த படம் உருவாகி உள்ளது.

Most Popular

Recent Comments