நடிகர் யோகிபாபு தனது திரையுலக பயணத்தில் எடுத்துள்ள புத்திசாலித்தனமான முடிவு என்னவென்றால் ஒரு பக்கம் மற்ற ஹீரோக்களின் படங்களில் நகைச்சுவை நடிகராக நடித்துக் கொண்டே இன்னொரு பக்கம் தன்னை தேடி வரும் நல்ல கதைகளில் கதையில் நாயகனாகவும் ஒப்புக்கொண்டு நடித்து வருவதுதான்.

கதாநாயகனாக நடிப்பதால் நகைச்சுவை கதாபாத்திரங்களை அவர் ஒதுக்குவது இல்லை. அந்த வகையில் மண்டேலா, பொம்மை நாயகி உள்ளிட்ட அவர் கதையின் நாயகனாக சமீபத்தில் நடித்த படங்கள் ரசிகர்களிடம் வரவேற்பை பெற்றன.

சில தினங்களுக்கு முன்பு சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான மாவீரன் படத்தில் நடித்திருந்த யோகிபாபுவின் நகைச்சுவை காட்சிகள் பெரிய அளவில் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றன. இந்த நிலையில் சமீபத்தில் யோகிபாபுவின் பிறந்தநாளின் போது அவரது புதிய படங்களின் அறிவிப்புகள் வெளியிடப்பட்டன.

அப்படி அறிவிக்கப்பட்ட படங்களில் ஒன்றுதான் வானவன். இந்த படத்தில் கதையின் நாயகனாக நடிக்கிறார் யோகிபாபு. படத்தை சஜின் கே சுரேந்தர் என்பவர் இயக்குகிறார். இந்த படத்தில் காளி வெங்கட், ரமேஷ் திலக், லட்சுமி பிரியா முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

‘வானவன்’ டைட்டில் மற்றும் மோஷன் போஸ்டரை – நடிகரும் இசையமைப்பாளருமான ஜி.வி.பிரகாஷ் குமார் மற்றும் இயக்குநர் மடோன் அஸ்வின் வெளியிட்டனர் இது தவிர சிம்பு தேவன் இயக்கத்தில் முழுக்க முழுக்க கடலை மையப்படுத்தி தயாராகி வரும் போட் என்கிற படத்திலும் நடித்து வருகிறார் யோகி பாபு .